தளர்கிறது லாலுவின் முரண்டு: இறங்கி வந்தார் பவார்
டெல்லி:
பிகாருக்கு சிறப்பு நிதியுதவி அளித்தால் தான், மத்திய அமைச்சரவையில் தனது கட்சி சேரும் எனபோர்க் கொடி உயர்த்திய லாலு பிரசாத் யாதவ் பெரும் கெஞ்சலுக்குப் பின இறங்கி வந்துள்ளார்.
இதை காங்கிரஸ் ஏற்க மறுத்ததால், கோபடைந்த லாலு பாட்னா கிளம்பிச் சென்றுவிட்டார்.அவருடன் தொலைபேசியில் பேசி காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தியடுத்து இன்றுமீண்டும் டெல்லி வந்தார்.
பிகாருக்கு நிதியுதவி என்று லாலு வெளியில் சொன்னாலும், உண்மையில் அவர் துணைப் பிரதமர்பதவி, உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளைக் கேட்பதால் தான் பிரச்சனை எழுந்ததாகக்கூறப்படுகிறது.
மேலும் தன்னையே உள்துறை அமைச்சராக்க வேண்டும் என்றும் அவர் கேட்டதாகவும், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியில் இருக்கும் அவருக்கு அமைச்சர் பதவி தர முடியாது எனகாங்கிரஸ் கூறிவிட்டது.
மேலும், நிதி, உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையை தன் வசமே வைத்துக்கொள்ள காங்கிரஸ் விரும்புகிறது.
இன்று காலை விமானம் மூலம் டெல்லி வந்திறங்கிய லாலு, விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அமைச்சரவை உருவாக்கம், பொது செயல் திட்டம் ஆகியவை குறித்து முடிவு செய்யும் முன்கருணாநிதி, ராம்விலாஸ் பாஸ்வான், நான் உள்பட கூட்டணிக் கட்சியினருடன் காங்கிரஸ்ஆலோசனைகள் நடத்த வேண்டும். அமைச்சரவையில் சேருவது குறித்து இன்று இரவுஅறிவிப்பேன் என்றார்.
பின்னர் நேராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டுக்குச் சென்ற லாலு, அவருடன்ஆலோசனை நடத்தினார். அங்கிருந்து திரும்பிய லாலு, மீண்டும் அவரை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து அவரை அர்ஜூன் சிங், ஆர்.கே. தவான், கபில்சிபல் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ்தலைவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது சில நிபந்தனைகளை லாலு விதித்தார். அதை காங்கிரஸ்ஏற்க முன் வந்துள்ளது.
இதையடுத்து அமைச்சரவையில் லாலு சேருவார் என்று தெரிகிறது.
அமைச்சரவையில் சேருவது குறித்து முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்து வந்த சரத்பவார் இன்றுமாலை சேருவதாக அறிவித்தார்.
பாதுகாப்புத் துறையை பவார் கேட்டதால் பிரச்சனை உருவானது. அதைத் தர காங்கிரஸ் தயாராகஇல்லாததால் பிரச்சனை செய்து வந்தார். இந் நிலையில் அவரை மூத்த காங்கிரஸ் தலைவர் பிரணாப்முகர்ஜி சந்தித்து சமாதானப்படுத்தி அமைச்சரவையில் சேர சம்மதிக்க வைத்தார்.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications