தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கையில் பேச்சுவார்த்தை
ராமேஸ்வரம்:
இலங்கை சிறைச் சாலைகளில் வாடி வரும் தமிழக மீனவர்களை மீட்கும் பொருட்டு தலைநகர் கொழும்புவில் வரும்27,28 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22மீனவர்கள் அடங்கிய குழு இலங்கை சென்றுள்ளது.
தமிழகத்தின் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டனம், நாகப்பட்டனம் உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போதெல்லாம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவருகிறார்கள்.
இலங்கை கடற்படையினரால் சுடப்படுவது, இலங்கை மீனவர்களால் கடத்தப்படுவது என தொடர்ந்துவிரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுதலையாவதற்கான அறிகுறியே இல்லை.
இந் நிலையில் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர முடிவு காணும் வகையிலும், இலங்கைசிறையில் அடைபட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை தலைநகர் கொழும்புவில் வரும் 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தேவதாஸ், அருள், ஞானசீலன், அருளானந்தம்,வின்சென்ட் மற்றும் புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 22 பேர் அடங்கிய மீனவர்குழு சனிக்கிழமை திருச்சி வழியாக கொழும்பு புறப்பட்டுச் சென்றுள்ளது.
கொழும்பு நகரில் தமிழக மீனவர் குழுவுக்கும், இலங்கை மீனவர் குழுக்களுக்கும் இடையே நடைபெறவுள்ளபேச்சுவார்த்தையில், இந்திய, இலங்கை தூதரக அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.-
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications