வாஜ்பாயின் மெளனம், தர்மசங்கட அத்வானி- கருணாநிதி
டெல்லி:
டெல்லியில் நேற்று நடந்த மன்மோகன்சிங் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தலைவர்களின் முகபாவங்கள், பலவித உணர்வுகளை வெளிப்படுத்தின.
பதவி விலகிச் செல்லும் பிரதமர் வாஜ்பாய் மிகவும் அமைதியாக காணப்பட்டார். யாருடனும் அவர் அதிகம்பேசவில்லை.
அதேபோல பதவி விலகிச் செல்லும் துணைப் பிரதமர் அத்வானியும் அமைதியாக, மிக இறுக்கமான முகத்துடன்காணப்பட்டார். அவருக்கு அருகில் திமுக தலைவர் கருணாநிதியை அமர வைத்து விட்டார்கள்.
இதனால் இருவரும் தர்ம சங்கடத்துடன் ஆளுக்கு ஒரு பக்கம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
சோனியா காந்தி மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த மார்க்சிஸ்ட் தலைவர்சோம்நாத் சாட்டர்ஜி, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆகியோருடன் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்.
பிரதமராகியிருந்தால் கூட அவர் இவ்வளவு உற்சாகமாக இருந்திருக்க மாட்டார் எனும் அளவுக்கு அதீத முகமலர்ச்சியுடன் சோனியா காணப்பட்டார்.
வழக்கம் போல சிக்கனமான புன்னகையுடன் மன்மோகன் சிங் காணப்பட்டார். வாயே திறக்காமல் எளிமையாகஇருந்த அவரைப் பார்த்தவர்கள், பிரதமர் பதவியை ஏற்கும்போது கூட இவ்வளவு எளிமையா என்றுஆச்சரியப்பட்டனர்.
வாஜ்பாய் விழா மண்டபத்திற்கு வந்தபோது அவரை மன்மோகன் சிங் வரவேற்று இருக்கையில் அமர வைத்தார்.அதேபோல வாஜ்பாய் சென்றபோதும் அவரை வழியனுப்பி வைத்தார்.
ராமதாஸ், அவரது மனைவிக்கு அருகில் பிரியங்கா, கணவர் வதேரா, ராகுல் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.ஆனால், அவர்கள் யாரும் ராமதாசுடன் பேசவில்லை.
மன்மோகன் சிங்கின் மனைவி கெளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸிட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்அருகே அமர்ந்திந்தார். இருவரும் பஞ்சாபியில் பேசிக் கொண்டிருந்தனர்.
தமிழக ஆளுநர் வாழ்த்து:
இந் நிலையில் பிரதமராகப் பதவியேற்றுள்ள மன்மோகன் சிங்குக்கு தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவ் வாழ்த்துதெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்கும் தங்களுக்கு எனதுஇதயபூர்வமான வாழ்த்துக்கள். உங்களது அனுபவம் வாய்ந்த தலைமையின் கீழ் நாடு முன்னேற்றப் பாதையில்நடைபோடப் போவதைப் பார்க்க நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர் என்று கூறியுள்ளார் ராவ்.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications