2 பேருக்கு மட்டும் பதவி: தமிழக காங்கிரஸ் ஏமாற்றம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ்கட்சியினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 12 பேருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம்கிடைத்துள்ளது. அதிகபட்சமாக திமுகவைச் சேர்ந்த 7 பேர் அமைச்சராகியுள்ளனர். பாமகவுக்கு 2 அமைச்சர் பதவிகிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 3 பதவிகள் கிடைத்துள்ளன.
ஆனால், இதில் ப.சிதம்பரம் காங்கிரசில் இல்லை. அவர் தனியாக காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை நடத்திக்கொண்டிருக்கிறார். இதனால் காங்கிரஸ் சார்பில் மணிசங்கர் அய்யர், இளங்கோவன் ஆகிய இருவர் மட்டுமேஅமைச்சர்களாகியுள்ளதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.
10 எம்.பிக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 2 இடங்களே கொடுத்துள்ளதால் தமிழக காங்கிரஸ்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளது. குறைந்தது 4 பேருக்காவது அமைச்சர் பதவி கிடைக்கும் என தமிழககாங்கிரஸ் எதிர்பார்த்தது.
தனுஷ்கோடி ஆதித்தன், ஆர்.பிரபு, தங்கபாலு ஆகியோர் தங்களுக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் எனநம்பிக்கையுடன் இருந்தனர். தனுஷ்கோடி ஆதித்தனுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு இருந்தது.
தங்கபாலுவும், பிரபுவும் தங்களது டெல்லி செல்வாக்கை வைத்து முயற்சித்து வந்தனர். ஆனால் 3 பேருக்கும் பதவிகிடைக்கவில்லை.
சோனியாவிடம் பேசி அமைச்சர் பதவியை வாங்கிவிட்டார் ப.சிதம்பரம்.
முதல்வர் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, அதிமுகவினரால் தாக்கப்பட்டதால் மணிசங்கர்அய்யருக்கு சோனியாவிடம் பரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரும் கேபினட் அமைச்சராகிவிட்டார்.
திமுக தலைவர் கருணாநிதியின் ஆதரவுடனும், சோனியாவிடம் உள்ள தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகவும்ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் அமைச்சர் பதவியை தட்டிச் சென்றுள்ளார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications