பாக் ஜலசந்தியை நீநதிக் கடந்து கேரள இளைஞர் சாதனை
ராமேஸ்வரம்:
கேரளாவைச் சேர்ந்த முரளிதரன் என்ற வாலிபர், இலங்கையின் தலைமன்னாரிலிருந்து பாக் ஜலசந்தியை நீந்திக்கடந்து ராமேஸ்வரம் வந்து சாதனை படைத்தார்.
கோட்டயத்தைச் சேர்ந்த 24 வயதான முரளிதரன் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் தான்அவருக்குத் திருமணம் ஆனது.
சாதனைகள் செய்வதில் ஆர்வம் உடைய முரளிதரன் நீச்சல் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். பாக் ஜலசந்தியை கடந்து சாதனை படைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாய் திட்டமிட்டிருந்தார்.
இந் நிலையில், நேற்று தலைமன்னார் சென்ற முரளிதரன், காலை 6.11 மணிக்கு கடலில் நீந்த ஆரம்பித்தார். மாலை6.10 மணிக்கு தனுஷ்கோடி வந்தடைந்தார்.
சுமார் 22 கிலோமீட்டர் கடல் தூரத்தை 11 மணி 59 நிமிடங்களில் அவர் கடந்தார்.
அவருக்கு இலங்கை கடற்படையும், இந்திய கடலோரக் காவல் படையும் பாதுகாப்பு தந்தன. வழியில்அவ்வப்போது குளுக்கோஸ் மற்றும் பிஸ்கெட்டை மட்டும் சாப்பிட்டார் முரளிதரன்.
இதற்கு முன் 1994ம் ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த குற்றாலீஸ்வரன் பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்ததுநினைவுகூறத்தக்கது. அதே போல வைத்தியநாதன் என்ற தமிழரும் கடந்துள்ளார்.
முதன்முதலில் பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்தவர் மிகிர் சென். அது நடந்தது 1968ம் ஆண்டில்.












Click it and Unblock the Notifications