மதுரை உயர்நீதிமன்ற கிளை: அமைச்சரிடம் காங். எம்.பி மனு
டெல்லி:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரிகாங்கிரஸ் எம்.பியான கார்வேந்தன் சட்டத்துறை அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜிடம் மனு கொடுத்தார்.
மதுரை உலகனேரியில் ரூ. 55 கோடி மதிப்பில் உயர் நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக்கிளையை திறக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மதுரைகிளை திறக்கப்பட்டால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என அவர்கள் கூறுகிறார்கள்.
அதேசமயம், பல முறை திறப்பு விழா தேதியை அறிவித்தும், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கிளைதிறக்கப்படாமல் உள்ளது. இதனால் தென் மாவட்ட மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பெரும் விரக்திஅடைந்துள்ளனர்.
உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, மதுரை நீதிமன்றத்தின் திறப்பு விழா குறித்து 3 முறை தேதிஅறிவித்தும் திட்டமிட்டபடி கிளை திறப்பு நடைபெறவில்லை.
இதையடுத்து பழனி நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன், மதுரையைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி.ஏ.ஜி.எஸ்.ராம்பா ஆகியோர் இன்று மத்திய சட்டத்துறை அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜை சந்தித்து மதுரை கிளையைஉடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்.
கலாமுக்கு கோரிக்கை:
இந் நிலையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை திறப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தலையிட்டுஉதவ வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரியுள்ளது.கலாமுக்கும், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி ஆர்.சி.லஹோத்திக்கும்சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் அனுபபியுள்ள மனுவில்,
மதுரை உயர் நீதிமன்றக் கிளையை அங்கீகரித்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தவுடன்தான் கிளை திறப்புகுறித்து அறிவிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு அறிவுறுத்த வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்திடம் அதிகபட்ச மாவட்டங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். திருச்சி,கரூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டனம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மதுரை கிளையுடன்சேர்க்கக் கூடாது. ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் மதுரை கிளைக்குக் கொடுக்கப்படக் கூடாது.
வழக்கறிஞர் சங்கத்துடன் கலந்து ஆலோசிக்காமல், மதுரை கிளை திறப்பு தொடர்பாக பலமுறை தேதிகளைஅறிவித்து வருகிறார் நீதிபதி சுபாஷன் ரெட்டி. இதனால் நீதித்துறை ஊழியர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும்,பொது மக்களுக்கும் பெரும் தர்மசங்கடமும், தேவையில்லாத குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன.
மதுரை கிளை தொடர்பான அனைத்துத் தகவல்களையும் எனக்கு அளிக்குமாறு தலைமை நீதிபதிக்கு உத்தரவிடவேண்டும் என்று பிரபாகரன் கூறியுள்ளார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications