தமிழர்களுக்கு உதவாத மலேசிய இந்தியத் தூதரகம் !
சென்னை:
மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம், அங்கு பரிதவிக்கும் தமிழர்களுக்கு சுத்தமாக உதவுவதில்லை என்றுமலேசியாவிலிருந்து மீண்டு சென்னை வந்து சேர்ந்த தமிழ் இளைஞர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் மலேசியா, சிங்கப்பூரில் வேலைக்குச் சென்று சரியான முறையில் வேலைகொடுக்கப்படாமல், போதிய சம்பளம் தரப்படாமல் ஏமாற்றப்படுகிறார்கள். அங்குள்ள சிறைச்சாலைகளில்அடைபட்டு பலவித கொடுமைகளுக்கும் ஆளாகி வருகிறார்கள்.
இதுபோன்று பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் சமீப காலமாக மீட்கப்பட்டு தமிழகம் வந்தவண்ணம் உள்ளார்கள்.கடந்த 2002ம் ஆண்டு தேனி, மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 35 இளைஞர்கள்வேலைக்காக மலேசியா சென்றனர்.
மலேசியாவில் அவர்களுக்கு முறையான வேலையோ அல்லது சம்பளமோ தரப்படவில்லை. சரியான ஆவணங்கள்இல்லை என்று கூறிய மலேசியப் போலீஸார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமூக சேவை நிறுவனம் ஒன்றின் முயற்சியால், இவர்களில்10 பேர் தற்போது மீட்கப்பட்டு வியாழக்கிழமைசென்னை வந்தனர். முருகன், கதிரவன், லூர்து, கலியபெருமாள், ராஜதுரை, பாலமுருகன், சுரேஷ், சுப்ரமணியன்,ராமலிங்கம், மதியழகன் ஆகிய அந்த பத்து பேரும் மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் தங்களுக்குஒருவிதத்திலும் உதவி செய்யவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் அவர்கள் செய்தியாளர்களிடம் தங்களது வேதனைகளையும், குமுறல்களையும் கொட்டித்தீர்த்தார்கள். அங்கு பட்ட சித்திரவதைகள், வேதனைகளை விட இந்தியத் தூகரகம் நடந்து கொள்ளும் முறைகுறித்துத்தான் அவர்கள் அதிகம் குற்றம் சாட்டினார்கள்.
மோசடி வேலை வாய்ப்பு நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு மலேசியா அழைத்துச் செல்லப்பட்டு பரிதவிக்கும்தமிழக இளைஞர்களுக்கு இந்தியத் தூதகரம் ஒரு உதவியையும் செய்வதில்லை என்று அவர்கள் குமுறினர்.
இந்தியத் தூதரகத்தை மலேசிய அதிகாரிகள் சுத்தமாக மதிப்பதில்லை என்றும் கூறிய அவர்கள், மலேசியாவில்உள்ள இந்தியத் தூதரகத்தை கலைத்து விடுவதே நல்லது என்றும் வேதனையுடன் கூறினார்கள்.
-
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
‘குடும்பம் முக்கியம் என்பதை நீங்க காட்டணும்’.. பதவியேற்பில் நடந்த சம்பவம்.. முதல்வர் விஜய்க்கு சமுத்திரக்கனி அறிவுரை -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
குதிரை பேரமா? அதெல்லாம் இல்லீங்க.. ஆதவ் அர்ஜுனா சொன்ன விளக்கம்! -
சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக..சரிந்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை! விஜய் போட்ட பக்கா ப்ளான்..பாவம் இபிஎஸ் -
வந்தாச்சு முக்கிய அறிவிப்பு.. நாளை முதல் பரபரபாகும் கிளாம்பாக்கம் - பக்ரீத் சிறப்பு பேருந்துகள் -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய் -
இவ்வளவு நாள் ஆண்டவங்களால செய்ய முடியாததை... உடனே விஜய் எப்படி செய்வார்? குஷ்பூ ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications