தமிழர் விடுதலை படை தொண்டர்கள் 6 பேர் கைது
கடலூர்:
தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப. இளவரசன் கைதைத் தொடர்ந்து அந்த இயக்கத்தைச் சேர்ந்த மேலும் 6 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப. இளவரசன் கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்தஇயக்கத்தைச் சேர்ந்த மற்றவர்களையும் பிடிக்க போலீஸார் தீவீர வேட்டை நடத்தி வந்தனர்.
இந் நிலையில் கடலூரில் வைத்து தமிழர் விடுதலைப் படை தொண்டர்கள் 6 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். கடலூர்-பாண்டிச்சேரி சாலையில் ஆறுப்பேட்டை என்ற இடத்தில் போலீஸார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு ஆட்டோ சந்தேகத்திற்கிடமான வகையில் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து ஆட்டோவைநிறுத்திய போலீஸார் அதில் சோதனையிட்டனர். அப்போது ஆட்டோவில் நாட்டு வெடிகுண்டுகள்,வெடிபொருட்கள், துப்பாக்கி ஆகியவை இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஆட்டோவில் இருந்த சரவணன், தமிழவன், ரமேஷ், மணிகண்டன், ஷாருக்கான் உள்ளிட்ட6 பேரைபோலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கடலூர் உப்பளவாடி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். தமிழர்விடுதலைப் படை இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர்கள்.
6 பேரிடமும் கடலூர் புதுநகர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications