புதிய ரேசன் கார்டு: நாளை முதல் விண்ணப்பம்
சென்னை:
ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு புதிய ரேசன் கார்டு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ரூ.5,000க்கு மேல் வருமானம் உடையவர்களின் ரேசன் கார்டுகளில் குத்தப்பட்ட எச் முத்திரையை தமிழக அரசுஅண்மையில் நீக்கியது.
இந் நிலையில் வருமான வரம்பு ஏதுமின்றி புதிய ரேசன் கார்டு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய ரேசன் கார்டுபெற மாதிரி விண்ணப்பப் படிவத்தையும் வெளியிட்டுள்ளது. இந்த படிவத்தில் உள்ள விவரங்களை கையால்எழுதியோ, தட்டச்சு செய்தோ ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
குடும்பத் தலைவர் அல்லது குடும்ப தலைவியின் 2 பாஸ்போர்ட் புகைப்படங்களை விண்ணப்பப் படிவத்துடன்இணைைக்க வேண்டும். விண்ணப்பத்தில், எந்தெந்த பொருட்கள் வேண்டும் என்ற விவரத்தைக் குறிப்பிடவேண்டும்.
சமையல் கியாஸ் சிலிண்டர் இருக்கிறதா என்ற விவரத்தையும், இதுவரை ரேசன் கார்டு பெற்றுக் கொள்ளாததற்கானகாரணத்தையும் விளக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சத்துணவு மைய அமைப்பாளரிடமோ அல்லது அங்கன்வாடி அமைப்பாளரிடமோஒப்படைக்க வேண்டும். அவ்வாறு தரும்போது ஒப்புகை சீட்டைப் (acknowldgement) பெற்றுக் கொள்ள வேண்டும்.
குடியிருப்பு முகவரிக்கான ஆதாரம் இருந்தால், அதன் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அதேநேரத்தில் ஆதாரம் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஆகஸ்டு முதல் வாரத்தில் இருந்து புதிய ரேசன் கார்டு வழங்கப்படும். ஒப்புகை சீட்டைத் தந்து அந்தந்த பகுதியில்உள்ள ரேசன் கடைகளில் புதிய ரேசன் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications