தமிழகத்தில் பாடப் புத்தகங்களுக்கு செயற்கை தட்டுப்பாடு !
சென்னை:
தமிழகத்தில் பள்ளிப் பாடப் புத்தகங்களுக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலையை உயர்த்தி, வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.
இதையடுத்து பள்ளிகள் மூலமே புத்தகங்களை சப்ளை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தக் கல்வியாண்டு தொடங்கி பள்ளிகள் திறந்துவிட்ட நிலையில் பல பாடப் புத்தகங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தேவையான அளவு புத்தகங்களை தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் அச்சிட்டு விற்பனைக்கு விட்டாலும், அவற்றை வியாபாரிகள் பத்து வைத்து வருகின்றனர்.
இதனால் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பாடப் புத்தகங்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி கொள்ளையடித்து வருகின்றனர் பல புத்தக வியாபாரிகள்.
மேலும் புத்தகம் வேண்டுமானால், ரப்பரில் ஆரம்பித்து ஸ்கேல், ஜியாமென்டரி பாக்ஸ், நோட்ஸ் ஆகியவற்றையும் வாங்க வேண்டும் என்று பல கடைகளில் கட்டாயப்படுத்துகின்றனர்.
இத்தனைக்கும் இந்த புத்தகக் கடைகள் அரசு அங்கீகாரம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்களிடம் தான் புத்தகம் வாங்கியாக வேண்டிய நிலையில் பெற்றோர்களும் மாணவர்களும் உள்ளனர்.
புத்தகங்களுக்கு அரசு இந்தக் கடைக்காரர்களுக்கு 9 சதவீதம் வரை கமிஷன் தருகிறது. ஆனாலும், பதுக்கி வைத்து, செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, 25 முதல் 40 சதவீதம் வரை விலையை உயர்த்தி கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர் பல வியாபாரிகள்.
இதையடுத்து பள்ளிகளுக்கே புத்தகங்களை அனுப்பி மாணவர்களுக்கு விற்கும் முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர். மேலும் தட்டுப்பாட்டை உருவாக்கி, லாபம் அடிக்கும் கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications