வாக்காளர்கள் பெயர் நீக்கம்: விசாரணை ஆரம்பம்
நாகர்கோவில்:
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ் தனது விசாரணையை கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று தொடங்கினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் லட்சக்கணக்கான வாக்காளர்களால் வாக்களிக்க இயலாமல் போனது.
இது குறித்து விசாரணை நடத்த கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தாமசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து தாமஸ் இன்று தனது விசாரணையைத் தொடங்கினார்.
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசனை நடத்திய அவர் தேர்தலின்போது தேர்தல் அதிகாரிகளாக இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து வீடு வீடாக சென்று வாக்காளர்கள் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எத்தனை வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர், அவர்களது பெயர்கள் எப்படி நீக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளேன்.
சட்டசபை தொகுதி வாரியாக விசாரணை நடைபெறும் என்றார். அடுத்த வாரம் தாமஸ் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications