கிளீனர் ஓட்டிய ஆம்னி பஸ்: கார்கள், ஆட்டோ, பைக் மீது மோதி 2 பேர் பலி
சென்னை:
சென்னையில் தனியார் ஆம்னி பேருந்து தாறுமாறாக ஓடி கார், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.கோயம்பேடு 100 அடி சாலையில் இன்று காலை ஒரு தனியார் சொகுசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை டிரைவருக்குப் பதிலாக கிளீனர் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
மிக வேகமாக வந்த அந்தப் பேருந்து திடீரென தாறுமாறாக ஓடியது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த கார், 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒரு ஆட்டோ மீது பஸ் அப்படியே ஏறி, இறங்கி ஆட்டோவை அப்பளமாக்கியது. இதில் ஆட்டோவில் இருந்த 5 பேர் காயமடைந்தனர்.
கார்கள் மீது மோதியதில் அதிலிருந்த இருவர் காயமடைந்தனர்.
பேருந்தின் ஓட்டுநரும், அதை ஓட்டி வந்த கினீனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.பியின் கார் மோதி 2 பேர் காயம்:
சேலம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன். மாணிக்க வேல் பயணித்த கார் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர்.
மாணிக்கவேல் காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் மீது மோதியதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் இருவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications