சென்னையில் 2 பெரும் தீ விபத்துகள்: ரூ. 70 லட்சம் நாசம்
சென்னை:
சென்னை நகரில் இன்று ஏற்பட்ட இரண்டு பெரும் தீ விபத்துக்களில் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
சென்னை பாரிமுனை தம்புச்செட்டித் தெரு பகுதியில் சவாணி லாரி சர்வீஸ் என்ற சரக்குப் போக்குவரத்து நிறுவனம் உள்ளது. இங்கு இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதில் நிறுவனத்திற்கு வெளியூர்களிலிருந்து வந்திருந்த பார்சல்கள், வெளியூருக்கு அனுப்பப்படவிருந்த பார்சல்கள் பற்றி எரிந்தன.
கொளுந்து விட்டு எரியத் தொடங்கிய தீயைக் கட்டுப்படுத்த 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து வந்தன. பார்சல்களில் ஹைட்ரஜன் பெராக்சைட் என்ற வேதிப் பொருளும் இருந்ததால், தீ மிக பயங்கரமாக எரிந்தது.
அதை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த விபத்தில் ரூ. 65 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாகத் தெரிகிறது.
இதேபோல, பெரியமேடு பகுதியில் உள்ள வேதிப் பொருள் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் தோல் பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சம்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications