குஜராத்: வாஜ்பாய் மீது ஆர்.எஸ்.எஸ். கடும் தாக்குநாக்பூர்:பா.ஜ.கவின் தேர்தல் தோல்விக்கு குஜராத் மதக் கலவரமும் ஒரு காரணம் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளதற்கு ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஓய்வுக்காக வந்துள்ள வாஜ்பாய், அங்கு நிருபர்களிடம் பேசுகையில் குஜராத் கலவரமும்தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது என்று கூறியிருந்தார். மேலும் அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியைநீக்குவது குறித்தும் யோசிக்கலாம் என்றார்.இந் நிலையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் பேசிய அதன் தலைவர் சுதர்சன்,குஜராத் கலவரம் தான் தோல்விக்குக் காரணம் என்றார் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் சட்டமன்றத்தேர்தல்களில் அந்தக் கட்சி ஏன் தோற்கவில்லை.குஜராத் கலவரத்தை பத்திரிக்கைகள், டிவிக்கள் தான் மிகவும் பெரிதாக்கிக் காட்டின. அதைப் பார்த்து வாஜ்பாயும்இவ்வாறு கருத்துத் தெரிவித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.கோத்ரா ரயில் எரிப்பு நடந்திருக்காவிட்டால், குஜராத் கலவரமே நடந்திருக்காது என்பதை வாஜ்பாய்சொல்லியிருக்கலாம். கலவரம் தொடங்கிய 4 நாட்களில் பல நல்ல நடவடிக்கைகள் எடுத்தார் நரேந்திர மோடி.ஆனால், அதை யாரும் பாராட்டவில்லை.கலவரத்தைத் தொடர்ந்து முகர்ரம், ஹோலி ஆகிய பண்டிகைகள் அமைதியாக நடந்து முடிந்தன. அதைபத்திரிக்கைகள் வெளியில் சொல்லவில்லை. மக்களின் மனதில் பொய்யான செய்திகளைப் பரப்புவதிலேயேதீவிரம் காட்டின.தங்களை மிகவும் நவீனமானவர்கள், பெரிய மனதுக்காரர்கள், லிபரல்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் தான்குஜராத் கலவரத்தை இன்னும் பெரிதுபடுத்திக் கொணடிருக்கிறார்கள்.வாஜ்பாயின் பேச்சினால் இந்து விரோத சக்திகள் தான் பலம் பெரும் என்றார் சுதர்சன்.இதற்கிடையே மோடி விவகாரம் குறித்து வாஜ்பாயுடன் பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு நடத்துவார்என அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.தூக்கு கயிற்றை முத்தமிடவும் தயார்: மோடிவாஜ்பாயின் கருத்து குறித்து நரேந்திர மோடி கூறுகையில்,மக்களவைத் தேர்தலுக்காக என்னை பலிகடாவாக்க முயற்சி நடக்கிறது. வாஜ்பாயின் கருத்துக்களை நான்ஏற்கவில்லை. குஜராத்தின் முன்னேற்றத்துக்குத் தடையான எந்த சக்தியையும் நான் எதிர்ப்பேன். கடுமையாகபோராடுவேன். இதற்காக தூக்குக் கயிற்றை முத்தமிடவும் தயார் என்றார்.மோடிக்கு அத்வானி, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. ஆதரவு இருந்தாலும் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் மத்தியில்எதிர்ப்பு நிலவுகிறது.பதவி ஆசை: வாஜ்பாய் மீது வி.எச்.பி தாக்குஇதற்கிடையே விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா கூறுகையில்,பா.ஜ.கவின் தோல்விக்கு வாஜ்பாயும் அத்வானியும் தான் காரணம். இந்த இருவருமே 80 வயதைத் தாண்டியும்பதவி ஆசை பிடித்து அலைகின்றனர். தோல்விக்கு மோடியை பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள்.இதன்மூலம் முஸ்லீம்களிடம் சரணாகதி அடைய முயல்கிறார்கள். அதற்குப் பதிலாக இவர்கள் அரசியல் சன்யாசம்வாங்கிவிடலாம் என்றார்.
நாக்பூர்:
பா.ஜ.கவின் தேர்தல் தோல்விக்கு குஜராத் மதக் கலவரமும் ஒரு காரணம் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளதற்கு ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஓய்வுக்காக வந்துள்ள வாஜ்பாய், அங்கு நிருபர்களிடம் பேசுகையில் குஜராத் கலவரமும்தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது என்று கூறியிருந்தார். மேலும் அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியைநீக்குவது குறித்தும் யோசிக்கலாம் என்றார்.
இந் நிலையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் பேசிய அதன் தலைவர் சுதர்சன்,
குஜராத் கலவரம் தான் தோல்விக்குக் காரணம் என்றார் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் சட்டமன்றத்தேர்தல்களில் அந்தக் கட்சி ஏன் தோற்கவில்லை.
குஜராத் கலவரத்தை பத்திரிக்கைகள், டிவிக்கள் தான் மிகவும் பெரிதாக்கிக் காட்டின. அதைப் பார்த்து வாஜ்பாயும்இவ்வாறு கருத்துத் தெரிவித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
கோத்ரா ரயில் எரிப்பு நடந்திருக்காவிட்டால், குஜராத் கலவரமே நடந்திருக்காது என்பதை வாஜ்பாய்சொல்லியிருக்கலாம். கலவரம் தொடங்கிய 4 நாட்களில் பல நல்ல நடவடிக்கைகள் எடுத்தார் நரேந்திர மோடி.ஆனால், அதை யாரும் பாராட்டவில்லை.
கலவரத்தைத் தொடர்ந்து முகர்ரம், ஹோலி ஆகிய பண்டிகைகள் அமைதியாக நடந்து முடிந்தன. அதைபத்திரிக்கைகள் வெளியில் சொல்லவில்லை. மக்களின் மனதில் பொய்யான செய்திகளைப் பரப்புவதிலேயேதீவிரம் காட்டின.
தங்களை மிகவும் நவீனமானவர்கள், பெரிய மனதுக்காரர்கள், லிபரல்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் தான்குஜராத் கலவரத்தை இன்னும் பெரிதுபடுத்திக் கொணடிருக்கிறார்கள்.
வாஜ்பாயின் பேச்சினால் இந்து விரோத சக்திகள் தான் பலம் பெரும் என்றார் சுதர்சன்.
இதற்கிடையே மோடி விவகாரம் குறித்து வாஜ்பாயுடன் பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு நடத்துவார்என அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
தூக்கு கயிற்றை முத்தமிடவும் தயார்: மோடி
வாஜ்பாயின் கருத்து குறித்து நரேந்திர மோடி கூறுகையில்,
மக்களவைத் தேர்தலுக்காக என்னை பலிகடாவாக்க முயற்சி நடக்கிறது. வாஜ்பாயின் கருத்துக்களை நான்ஏற்கவில்லை. குஜராத்தின் முன்னேற்றத்துக்குத் தடையான எந்த சக்தியையும் நான் எதிர்ப்பேன். கடுமையாகபோராடுவேன். இதற்காக தூக்குக் கயிற்றை முத்தமிடவும் தயார் என்றார்.
மோடிக்கு அத்வானி, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. ஆதரவு இருந்தாலும் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் மத்தியில்எதிர்ப்பு நிலவுகிறது.
பதவி ஆசை: வாஜ்பாய் மீது வி.எச்.பி தாக்கு
இதற்கிடையே விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா கூறுகையில்,
பா.ஜ.கவின் தோல்விக்கு வாஜ்பாயும் அத்வானியும் தான் காரணம். இந்த இருவருமே 80 வயதைத் தாண்டியும்பதவி ஆசை பிடித்து அலைகின்றனர். தோல்விக்கு மோடியை பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள்.
இதன்மூலம் முஸ்லீம்களிடம் சரணாகதி அடைய முயல்கிறார்கள். அதற்குப் பதிலாக இவர்கள் அரசியல் சன்யாசம்வாங்கிவிடலாம் என்றார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications