போலீஸ் பொய் வழக்கு: வாலிபர் தீக்குளிப்பு
போடி:
தன் மீது போலீசார் பொய்யாக திருட்டுக் குற்றம் சாட்டியதால் மனமுடைந்த வாலிபர் காவல் நிலையம் முன் தீக் குளித்தார். உடல் முழுவதும் எரிந்து போய் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போடி சந்தைப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (24) சமையல்காரராக உள்ளார். போலீஸ்காரர் சக்திவேல் என்பவரின் தங்கச் சங்கிலி காணாமல் போனது தொடர்பாக மணிகண்டனை போலீசார் விசாரித்தனர்.
சங்கிலியை நான் திருடவில்லை என்று மணிகண்டன் சொல்லியும் கேட்காமல், அவரை நேற்றிரவு முழுவதும் போலீசார் போடி காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்துள்ளனர்.
இதையடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்று சொல்லி விடுவித்துள்ளனர். ஆனால், பணத்தைத் திரட்ட முடியாத மணிகண்டன் போலீசாருக்குப் பயந்து இன்று காலை உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு காவல் நிலையத்துக்கு எதிரே போய் உடலில் தீ வைத்துக் கொண்டார்.
நான் திருடவில்லை.. நான் திருடவில்லை என்று தீயில் எரிந்து, அலறியபடியே ஓடிய மணிகண்டன் மயங்கி விழுந்தார். அவர் மீது நீரை ஊற்றி அப் பகுதி மக்கள் தீயை அணைத்தனர்.
ஆனால், உடல் பெருமளவில் வெந்து போன நிலையில் மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தவறாக ஒருவரைத் தண்டித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications