விவேக்கை விடாமல் துரத்தும் கரப்பான் பூச்சி!
சென்னை:
மிரிண்டா விளம்பரத்தில் நடித்ததோடு சரி, அதில் கரப்பான் பூச்சி வந்ததற்கு நான் பொறுப்பேற்க முடியாது என நடிகர் விவேக் கூறியுள்ளதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சென்னையில் மிரிண்டா குளிர்பானத்தை வாங்கிய 2 வழக்கறிஞர்கள் அதில் கரப்பான் பூச்சி செத்த நிலையில் மிதந்ததைக் கண்டு அதிர்ந்தனர். உடனே நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
வழக்கில் மிரிண்டா குளிர்பான விளம்பரத்தில் நடித்த விவேக்கையும் ஒரு குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
இந் நிலையில் மிரிண்டா விளம்பரத்தில் நடித்ததோடு எனது பங்கு முடிந்து விட்டது. அதில் கரப்பான் பூச்சி மிதந்ததற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும், கரப்பான் பூச்சி மிதந்த மிராண்டா போலியாக யாராவது தயாரித்ததாக இருக்கலாம் என்று விவேக் கூறியுள்ளார்.
இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவேக்கின் கருத்து சரியல்ல. மிரிண்டா குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ளதன் மூலம் இந்தப் பிரச்சினையில் விவேக்குக்கும் தார்மீக பொறுப்பு இருக்கிறது.
ஒரு குளிர்பானத்தை பிரபலப்படுத்தும் ஒருவர், அதைக் குடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு பதில் சொல்லியாக வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அவர் தப்பக் கூடாது.
எனவே இந்தப் பிரச்சினையில் விவேக் நேரடியாகவே சம்பந்தப்பட்டுள்ளார்.
கோக், பெப்சி போன்ற பானங்களில் நச்சுத் தன்மை உள்ளதாக ஆய்வுகள் கூறி வரும் நிலையில், அந்த வெளிநாட்டு பானங்களை பிரபலப்படுத்தும் முயற்சியில், நடிகர், நடிகைகள் ஈடுபடுவது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று கூறியுள்ளார் வெள்ளையன்.
மிரிண்டாவில் கரப்பான் பூச்சி!: நடிகர் விவேக் மீது வழக்கு!!
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications