காவிரி: காக்காய்கள் உட்கார..ஆசிரியரைத் தொடர்பு கொள்ள

Subscribe to Oneindia Tamil

- ஆசிரியர்

காவிரி விஷயத்தில், காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையே கொஞ்சம் வித்தியாசமாய்நடந்தேறியிருக்கிறது.

காவிரியில் தண்ணீர் விடுவது தொடர்பாக மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக் குழுவை பிரதமர்மன்மோகன் சிங் கூட்டினாராம். அதில் ப.சிதம்பரம், தயாநிதி மாறன் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள்கலந்து கொண்டார்களாம்.

இக் கூட்டத்தைத் தொடர்ந்து கர்நாடக முதல்வருடன் பிரதமர் தொலைபேசியில் பேசி, தமிழகத்துக்கு நீர் விடுமாறுஉத்தரவிட உடனே அது குறித்துப் பரிசீலிப்போம் என கர்நாடக முதல்வர் தரம்சிங் உத்தரவாதம் தந்திருக்கிறார்.

நீர் தருவது குறித்துப் பரிசீலிப்போம் என்று தரம்சிங் சொல்லிக் கொண்டிருந்தபோதே கபினியில் இருந்துதமிழகத்துக்கு வினாடிக்கு 20,000 கன அடி நீர் பாய்ந்து கொண்டிருந்தது.

தரம்சிங்கே நினைத்தாலும் நிறுத்த முடியாத அளவுக்கு கபினியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அது தமிழகத்துக்குஓடிக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய அமைச்சரவை கூடி தண்ணீரைத் திறந்துவிடுமாறு உத்தரவிட்டிருக்கிறது.

குறுவை, சம்பா நெல் சாகுபடியை மூன்று வருடமாக இழந்துவிட்டு நிற்கும் தமிழக விவசாயிகள் தண்ணீருக்காகஏப்ரல் மாதத்தில் இருந்து கதறிக் கொண்டிருக்க, அதை சிறிதும் கண்டுகொள்ளாமல் முகம் திருப்பிக்கொண்டிருந்தது கர்நாடகம்.

தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்ட விவசாயிகளிடையே கடும் அதிருப்தியும் சோகமும் நிலவினாலும்அதை அப்போதைய மத்திய அரசும், மாநில அரசும் கண்டுகொள்ளவேயில்லை.

காவிரி விஷயத்தில் காது கேட்காத மாதிரி அமைதி காத்து விவசாயிகளின் எரிச்சலை மேலும் தூண்டிவந்தது தமிழகஅரசு. இந் நிலையில் தேர்தல் வந்தது.

மத்தியில் பா.ஜ.க. போய் காங்கிரஸ் வந்ததாலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்ததாலும்காவிரிப் பிரச்சனையை வைத்து காங்கிரசை கண்ணில் விரல் விட்டு ஆட்ட முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டார்.

அதே வேளையில், பதவிக்கும், வளம் கொழிக்கும் துறைகளுக்கும் டெல்லியில் திமுக போட்ட சண்டை அந்தக்கட்சியின் மீதான மரியாதையைக் கேள்விக் குறியாக்கிவிட, உடனே அதற்கும் ஒரு திசைத் திருப்பல் தேவைப்பட,தூக்கினார்கள் காவிரிப் பிரச்சனையை.

40 தொகுதிகளில் வென்ற திமுக கூட்டணி மீது பெரும் பொறுப்பை முதல்வர் ஜெயலலிதா தூக்கி வைக்க, அதைசாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தது திமுக.

முன் கூட்டியே ஆரம்பித்துவிட்ட பருவ மழை, கர்நாடகத்தில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை,கர்நாடக அணைகளின் நீர் மட்டம் போன்றவற்றை மனதில் வைத்துக் கொண்டே எப்படியும் நீர் வந்துவிடும் என்றநம்பிக்கையில், காவிரியில் நீர் விட உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பிரதமரை நெருக்கஆரம்பித்தது திமுக.

கர்நாடகத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் வந்தாலும் அதை வைத்தே அடுத்த தேர்தலை திமுக சந்தித்துவிடும்என்ற பயம் தொற்றிக் கொள்ள, திமுகவுடனான ஜென்மப் பகையை ஒதுக்கிவிட்டு தானும் பிரதமரை சந்திக்கும்குழுவில் பங்கேற்றது அதிமுக.

அதே போல கர்நாடக முதல்வரை திமுக கூட்டணியினர் சந்தித்துவிட்டு ஊர் திரும்பிய நிலையில், பெங்களூர் போகஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள் தமிழக அமைச்சர்கள் பொன்னையன், பன்னீர்செல்வம், தளவாய் சுந்தரம்ஆகியோர்.

கர்நாடகத்துடன் இனி பேச்சே கிடையாது, காவிரி ஆணையம் எல்லாம் வேஸ்ட் என எடுத்தெறிந்து பேசி வந்தமுதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று இல்லாத மாற்றம் தெரிந்தது.

திமுக என்னென்ன செய்ததோ அதையெல்லாம் அதிமுகவும் செய்தது. இதற்கு முக்கியக் காரணம் கர்நாடகத்தில்பெய்து வரும் மழையே.

கடும் மழை காரணமாக கர்நாடகம் அணைகளைப் பூட்டினாலும் அதையும் தாண்டி நீர் வந்தே சேரும் என்றநம்பிக்கையுடன் திமுக டெல்லியில் போராட்டம் நடத்த, அதே நம்பிக்கையுடன் அதிமுகவும் அமைச்சர்களைகர்நாடகத்துக்கு அனுப்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இப்போது கபினியில் இருந்து மழை நீர் வெள்ளமாக மேட்டூரை நோக்கிப் பாய ஆரம்பித்துள்ளது.

காக்காய் உட்ராக பனம் பழம் விழுந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.. ஆனால், இந்தக் காக்காய்கள் பழம்விழுந்த பின் மரத்தில் உட்கார்ந்துவிட்டு நீரைக் கொண்டு வந்துவிட்டோம் என மைக் கட்டி முழங்கப் போகின்றன.

நாங்கள் உத்தரவிட்டோம் நீர் வந்தது என்று மத்திய அரசு காக்கா சொல்லும்.

நாங்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள், ரொம்ப நியாயவாதிகள், இதனால் தமிழகத்துக்கு நீரை விட்டுள்ளோம்என்று கர்நாடக அரசு காக்கா சொல்லும். (அணையின் பாதுகாப்புக்கு பிரச்சனை இல்லாத அளவுக்கு வெள்ளம்குறைய ஆரம்பித்த உடனேயே நீரை நிறுத்திவிடுவார்கள் என்பது வேறு விஷயம்)

எங்களை மாதிரி யாரேனும் உலகினில் உண்டோ.. இதோ நீரைக் கொண்டு வந்துவிட்டார் டாக்டர் கலைஞர் எனதிமுக காக்கா கரையும்

அடடா.. புரட்சித் தலைவியின் சாதனையைப் பாரீர் என அதிமுக காக்கா முழங்கும்.

ஆனால், காலத்தே பயிர் செய் என்ற ஒரு விஷயம் உண்டு. இப்போது வரும் நீரை வைத்து குறுவை நெல்லைப்பயிரிட்டால் ஒரு பிரயோஜனமும் இருக்காது என்கின்றனர் டெல்டா விவசாயிகள்.

காவிரி வெற்றியாளர்களின் காதுகளில் இது விழவா போகிறது?

ஆசிரியரைத் தொடர்பு கொள்ள

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+