ராம.கோபாலன் மீதான வழக்கை வேகப்படுத்த உத்தரவு
சென்னை:
முஸ்லீம்களை கொள்ளையர்கள் என்றும், கிருஸ்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பேசிய இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கும்பகோணத்தில் நடந்த இந்து எழுச்சி மாநாட்டில் ராம கோபாலன் பேசுகையில், கிறிஸ்தவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும். முஸ்லீம்கள் கொள்ளையர்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் ராம.கோபாலன் மீது புகார் கொடுத்தாலும் அதை வாங்க போலீசார் மறுப்பதாக ஹைதர் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ராம. கோபாலன் மீது வழக்குப் பதிவு செய்ய கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ராம.கோபாலன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் வழக்கை போலீசார் கிடப்பில் போட்டுவிட்டனர். இதைத் தொடர்ந்து ஹைதர் அலி மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி நாகப்பன், இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் மீதான வழக்கு விசாரணையை வேகப்படுத்துமாறும், இறுதி விசாரணை அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி கும்பகோணம் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications