தண்ணீர் வந்தும் பயனில்லை.. விவசாயிகள் சங்கம்
தஞ்சாவூர்:
கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்து குறுவை சாகுபடியில் ஈடுபட்டால் அறுவடையின்போது விவசாயிகளுக்கு பெரும் இழப்பு காத்திருக்கும் என்று தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ரங்கநாதன் எச்சரித்துள்ளார்.
ரங்கநாதன் நிருபர்களிடம் கூறுகையில்,
கபிணி அணையிலிருந்து கர்நாடகம் இப்போது தான் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. அதேபோல, கிருஷ்ணராஜ சாகரும் நிரம்பினால் தமிழகத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும். இதனால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் ,இந்த சந்தோஷத்தில் குறுவை சாகுபடியைத் தொடங்கினால் அறுவடை நேரத்தில் பெரும் இழப்பை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.
குறுவை சாகுபடியைப் பொருத்தவரை மே மாதத்திலேயே நாற்று வளர்த்து விட வேண்டும். ஜூன் மாதத்தில் நடவு நட வேண்டும். அப்போதுதான் அறுவடைக்கு சரியாக இருக்கும்.
ஆனால், டெல்டா பகுதியில் நிலவிய கடும் நிலத்தடி நீர்ப் பஞ்சம் மற்றும் கர்நாடகம் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாதது ஆகிய காரணங்களால் பல பகுதிகளில் விவசாயிகள் இன்னும் நாற்றே வளர்க்கவில்லை.
இனிமேல் நாற்று வளர்த்து, நடவு செய்தால், ஆகஸ்ட் மாதத்தில் அறுவடைக்குப் பயிர்கள் தயாராகும்போது, வட கிழக்குப் பருவ மழை குறுக்கிட்டு பயிர்களை நாசமாக்கி விடும்.
எனவே கர்நாடகம் தாமதமாகத் தந்துள்ள தண்ணீரை நம்பி குறுவை சாகுபடியில் இறங்கினால் அறுவடையின்போது பாதிக்கப்பட நேரிடும் என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு ஒரே மாற்று, தற்போது கிடைக்கும் தண்ணீரை மேட்டூர் அணையிலேயே தேக்கி வைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேக்கி வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு வரும் சம்பா நெல் சாகுபடியை ஒழுங்காக செய்யலாம். இதன் மூலம் விவசாயிகளின் குறுவை நஷ்டத்தைத் தவிர்ப்பதோடு, சம்பா மூலம் அவர்கள் வாழ்வையும் காக்க முடியும் என்றார் ரங்கநாதன்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications