அதிமுகவினருக்கு கோயில் அறங்காவலர் பதவிகள்
சென்னை:
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக கோயில்களுக்கு அறங்காவலர்களாக அதிமுகவினரை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோற்றவர்களுக்கு வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன. அதே போல அதிமுக நிர்வாகிகள் பலரும் அரசு வாரியங்களின் தலைவராகியுள்ளனர்.
இந் நிலையில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களுக்கு அறங்காவலர்களாக அதிமுகவினரை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பொறுப்புகளில் கட்சியின் தீவிர விசுவாசிகள், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், கட்சியில் பதவி கிடைக்காதவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனையடுத்து பதவியைப் பிடிக்க கட்சிக்காரர்கள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் சிபாரிசுகளைத் தேடி அவர்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
பதவி வாங்கித் தருவதாகக் கூறி சில முக்கியத் தலைகள் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன.
வருமானம் அதிகமுள்ள கோயில்களில் அறங்காவலர் பதவியைப் பெற கடும் போட்டி நிலவுகிறது. மயிலை கபாலீஸ்வரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன், பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் முருகன் கோயில்கள் ஆகிய கோயில்களில் அறங்காவலர் பதவியை அடைய கட்சியினர் போட்டா போட்டி போடுகின்றனர்.
முன்பு வாரியப் பதவிக்கு கல்லூரி முதல்வர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications