குஜராத் என்கவுண்டர்: நாடகம் என்கிறது தமுமுக
சென்னை:
குஜராத் போலீஸார் சுட்டு இஷ்ரத் என்ற மாணவி உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில்,
இந்த குஜராத் எண்கென்டர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதன் மூலம் குஜராத் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும். மேலும் சிறுபான்மை மக்களின் மனதில் நிலவும் அச்ச உணர்வும் போக்கப்படும்.
குஜராத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரும் தீவிரவாதிகள் இல்லை. அவர்கள் அப்பாவிகள். மக்களின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனது செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவே இந்த எண்கெளன்டர் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்று கூறியுள்ளார் ஜவாஹிருல்லா.












Click it and Unblock the Notifications