அதிமுகவில் எஸ்.வி.சேகர்: தலைவி ஆணையிட்டால்...
சென்னை:
இதுவரை பாஜகவில் இருந்து வந்த நாடக, சினிமா நடிகர் எஸ்.வி.சேகர் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
சட்டசபைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, முதுபெரும் அரசியல் தலைவராக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனை விட அதிக ஓட்டுக்கள் வாங்கி ஒரு காலத்தில் பரபரப்பூட்டியவர் பிரபல சேகர்.
காஞ்சி மடத்தின் ஆசி பெற்ற சேகர் பின்னர் பாஜகவில் இணைந்தார். டிவிக்களில் காவிச் சட்டையுடன் வந்தமர்ந்து பா.ஜ.க ஆதரவு பிரச்சாரம் செய்து வந்தார். சமீபத்திய தேர்தலின்போதும் பாஜகவுக்கு பிரசாரம் செய்தார்.
இந் நிலையில் இன்று காலை முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் எஸ்.வி.சேகர்.
ஜெயலலிதாவிடம் சேகர் சால்வையை வழங்க, அவருக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார் முதல்வர்.
பின்னர் சேகர் கூறியதாவது:
எல்லா கட்சிகளும் சிறுபான்மையினருக்கு மட்டுமே குரல் கொடுக்கும்போது, முதல்வர் ஜெயலலிதா மட்டுமே இந்துக்களுக்காக குரல் கொடுத்தார். கோவில்களில் அன்னதானம் போன்ற நல்ல திட்டங்களை நிறைவேற்றிய முதல்வரின் கடவுள் பக்தியும், துணிச்சலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இதுவரை நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இருந்ததில்லை. இப்போது தான் முதல் முறையாக அதிமுகவில் உறுப்பினராகியுள்ளேன்.
பா.ஜ.கவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கொள்கை அளவில் வேற்றுமை ஏதுமில்லை. தாய் என்பது நாடு, தந்தை என்பது மதம், அதன் பிறகு தான் மொழிக்கு நான் முக்கியத்துவம் தருகிறேன்.
இனி எனக்கு ஒரே தலைவி புரட்சித் தலைவி தான். அவர் ஆணையிட்டால் கழகக் கொள்கைகளை மக்களிடம் சேர்ப்பேன். தலைவிையை நம்பியவர்கள் வீண் போனதில்லை என்றார் உணர்ச்சிவசமாக.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications