குட்டி சாமியாரை வைத்து பக்தி மோசடி: கி.வீரமணி
சேலம்:
சட்ட விரோதமாக மான் தோலை பயன்படுத்தியது தொடர்பாக கைது போன்ற நடவடிக்கையை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார் சேலம் குட்டிச் சாமியார் பரணீதரன் என்கிறார்கள்.
மான்தோலில் அவர் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிய விவகாரத்தையடுத்து வனத்துறையினர் அவரது ஆசிரமத்தில் ரெய்ட் நடத்தினர்.
இந் நிலையில் ரகசியமான இடத்தில் ஆசிரமத்தினரால் தங்க வைக்கப்பட்டுள்ள குட்டி சாமியாரின் சார்பில் சேலம் உரிமையியல் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேவியட் எனப்படும் இந்த முன்னெச்சரிக்கை மனுவை தாக்கல் செய்துள்ளதன் மூலம், இவர் மீதான புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் முன் இவரிடம் அது குறித்துத் தெரிவித்த பின்னரே போலீசார் அல்லது வனத்துறையினர் எதுவும் செய்ய முடியும்.
நடவடிக்கை எடுக்க முடியும்.
குட்டிச் சாமியாரின் கருத்தை அறியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது. மான் தோல் விவகாரத்தில் தப்பவே, இந்த கேவியட் மனுவை ஆசிரமம் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
குட்டிச் சாமியாரின் வருகைக்குப் பின் அவரை கவனித்து வரும் ஆசிரமத்துக்கு ஏகப்பட்ட வருமானம் வர ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சாமியாருக்காக ஒரு பக்தர் பொலேரோ ஜீப்பைத் தந்துள்ளார். சாமியாரின் பெயரைச் சொல்லி, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ரூ. 20,000 வரை வசூலிக்கிறது அந்த ஆசிரமம் என்கிறார்கள்.
சமீபத்தில் குட்டிச் சாமியாரின் அக்காவுக்குத் திருமணம் நடந்தபோது அந்தச் செலவையும் ஆசிரமமே கவனித்ததாம்.
பொன் முட்டையிடும் இந்த வாத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து பணம் பார்க்க குட்டிச் சாமியாரின் பெற்றோரும் விரும்புவதால் தான் இப்போது ஆசிரமத்துக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் உருவாகி, சாமியார் கடத்தல் எல்லாம் நடந்து எனகிறார்கள்.
கி.வீரமணி பாய்ச்சல்:
இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலத்தில் பரணீதரன் என்ற பெயரில் ஒரு குட்டிச் சாமியார் பையன் பற்றி பத்திரிக்கைகள் மிக அதிகமாக விளம்பரம் செய்து, அச் சிறுவனை ரொமப்ப் பெரிய சந்நியாசி மாதிரி சித்தரிக்கின்றன.
இது மக்களை ஏமாற்றும் பக்தி மோசடி. பகுத்தறிவாளர்களும், திராவிட இயக்கத்தினரும் இந்த சாமியாரின் பின்னணி பற்றி ஆராய வேண்டும், அதை அம்பலத்துக்குக் கொண்டு வர வேண்டும்.
இதைவிட முக்கியயம் காவல்துறையினர் செய்ய வேண்டிய வேலை. இந்தப் பையனை பின்னால் இருந்து பாடம், வசனம், தத்துவ விளக்கங்கள் சொல்லிக் கொடுத்து, நடிக்க வைத்து, இவரை வைத்து நொண்டிப் பிள்ளையைக் காட்டி பிச்சையெடுக்கும சில பிச்சைக்காரர்கள் போல் யார், யார் உள்ளனர் என்பதை போலீஸ் விசாரிக்க வேண்டும்.
இந்தப் பையனின் மூலாதாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் பையன் தனக்கு காஞ்சி சங்கராச்சாரியாருடன் 2 வருடங்களாக தொடர்பிருந்ததாக சொல்கிறார். அதையும் விசாரிக்க வேண்டும்.
இந்த பக்தி மோசடி குறித்துப் பேச வரும் ஜூலை 11ம் தேதி சேலத்தில் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது திராவிடர் கழகம். அதில் விளக்கமாக இது குறித்துப் பேசுவேன்.
இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications