கடும் கோபத்தில் திமுக
சென்னை:
தனது வெளிநாட்டுப் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு, ரசிகர்களுடன் விஜயகாந்த்தும் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ள விஜயகாந்த்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை அரசியல் வட்டாரம் தீவிரமாக உற்று நோக்கி வருகிறது.
மத்திய அரசில் இலாகாக்களைக் கேட்டு மோதியதாகச் சொல்லி திமுகவையும், ஜாதிக் கட்சி என்ற பெயரில் பா.ம.கவையும் கடுமையாக விமர்சித்த விஜய்காந்த், அதிமுகவை மட்டும் விமர்சிக்கவில்லை.
தாங்கள் ஆட்சியில் இருந்தபோது தங்களை ஆகா.. ஓகோவென புகழ்ந்த விஜய்காந்த் இப்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக நினைக்கிறது திமுக. வர்த்தகரீதியில் கல்லூரிகள் நடத்தி வரும் விஜய்காந்த், அதற்காக ஆட்சிக்கு தக்க தனது நிலையை மாற்றிக் கொள்வதாக திமுக கருதுகிறது.
அதே நேரத்தில் மத்தியில் தங்களிடம் வருமான வரித்துறை இருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டி முரசொலியில் கேள்வி-பதில் பகுதியில் எழுதியிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.
சினிமாவில் விஜய்காந்த் வாங்கும் எக்கச்சக்க ஊதியம், சினிமாவில் புழங்கும் கருப்புப் பணம் ஆகியவற்றை முடிச்சு போட்டு, வருமான வரித்துறை வசம் உள்ள ரெய்ட் ஆயுதத்தைச் சுட்டிக் காட்டவே கருணாநிதி இப்படி எழுதியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில், அதிமுகவை விஜய்காந்த் மறைமுகமாக ஆதரித்தாலும்,சினிமாவை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட அதிமுக எந்த அளவுக்கு விஜய்காந்தை ஆதரிக்கும் என்று தெரியவில்லை.
ரஜினியை வளர்த்தால் தங்களுக்கே அது எதிர்காலத்தில் சிக்கலாகிவிடும் என்பதால் தான் அவர் தானே வலிய வந்து கொடுத்த ஆதரவைக் கூட முதல்வர் ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் விட்டார்.
இந் நிலையில் அதிமுவுக்கு பலம் நிறைந்த கிராமப்புறங்களில் பாப்புலராக விளங்கும் விஜய்காந்துக்கு ஜெயலலிதா கொம்பு சீவி விட மாட்டார் என்ற நம்பிக்கையில் திமுகவும் பாமகவும் உள்ளன.
என்ன ஆனாலும் சரி, விஜய்காந்துடன் மோதிப் பார்த்துவிடுவதில் பா.ம.க தீவிரமாக உள்ளது.
ஆனால், திமுகவோ, தங்களை நோக்கி விஜய்காந்த் வீசும் விமர்சனங்களுக்கு மட்டுமே பதில் சொல்வது, மற்றபடி ரஜினியை கண்டு கொள்ளாமல் விட்டது மாதிரி விஜய்காந்த் விஷயத்திலும் அமைதியாக இருந்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளது.
விஜய்காந்த் தங்களுக்கு எதிராக ஓவராகப் போகும்பட்சத்தில் வருமான வரித்துறை மூலம் வேலையைக் காட்டுவது என்ற முடிவில் உள்ளது திமுக.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications