ஆங்கில பெயருடன் வரும் தமிழ் படங்களுக்கு தடா
சென்னை:
தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களை சூட்டுவதை எதிர்த்து, அந்தப் படங்கள் ஓடுவதைத் தடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ள திருமாவளவன், அதன் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் தொடர்ந்து திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு, திரைப்படங்களுக்கு தமிழ் அல்லாத பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் பெயர் சூட்டி வருகின்றனர்.
இதைத் தவிர்த்திடுமாறு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகளுக்கு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கடிதங்கள் எழுதினோம். ஆனால், அதை பொருட்டாக மதிக்காமல் பிற மொழிப் பெயர் சூட்டல் தொடர்கிறது.
இதை கண்டிக்கிறோம். இனி இத்தகைய பெயர்களோடு திரைப்படங்கள் வெளியானால், அதை எதிர்த்து போராடி, படம் ஓட்டப்படுவதைத் தடுப்போம்.
மொழி, இன உணர்வுகளை மீட்டெடுக்கவும், தமிழ்த் தேசிய உணர்வை வளர்க்கவும் நாடு தழுவிய அளவில் சுவரெழுத்து இயக்கம் நடத்தப் போகிறோம்.
பள்ளிக் குழந்தைகளுக்கான பாடக் குறிப்பேடுகளில் (நோட்டுகள்) நடிகர், நடிகைகளின் படத்தை அச்சிட்டு விற்று, சினிமா மோகத்தை பிஞ்சு உள்ளங்களில் திட்டமிட்டு வளர்க்கும் போக்கைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாறாக வரலாற்றுத் தலைவர்கள், தமிழறிஞர்கள், விஞ்ஞானிகளின் படத்தை அச்சிட்டு விற்க ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications