அறிவாலய நிலத்தை கைப்பற்ற மாநகராட்சி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு முன்பு உள்ளநிலத்தைக் கையகப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி முடிவு செய்துள்ளது.ஜூலை 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதீர்மானத்தின் நகல்களை அனைத்துக் கவுன்சிலர்களுக்கும் மாநகராட்சி அனுப்பியுள்ளது.

தீர்மான நகலில் கூறப்பட்டுள்ளதாவது: அண்ணா அறிவாலயம் முன்பு உள்ள காலியிடத்தை மாநகராட்சிஉடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த காலியிடம் பொது பயன்பாட்டுக்கான காலியிடமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார்களின் கைக்கு இது சென்று விடாமல் தடுக்க உடனடியாக இந்தநிலத்தைக் கையகப்படுத்த வேண்டும்.

நகர திட்ட வடிவமைப்புச் சட்டத்தின்படி 10,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் உள்ள ஒரு நிலத்தில் யாராவதுகட்டடம் கட்டினால், அதில் 10 சதவீத நிலத்தை சென்னை மாநகராட்சி அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்திடம், பொது பயன்பாட்டுக்கான காலியிடமாக ஒப்படைக்க வேண்டும்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் 18,909.88 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.திமுக அறக்கட்டளைக்கு இந்த நிலம் சொந்தமானது. நகர திட்ட வடிவமைப்புச் சட்டப்படி 1,890 சதுர மீட்டர்நிலப்பரப்பை மாநகராட்சி அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் திமுக அறக்கட்டளைஒப்படைத்திருக்க வேண்டும்.

ஆனால், 1988ம் ஆண்டு மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஒரு அரசு உத்தரவு மூலம், நிலத்தைஒப்படைப்பதிலிருந்து திமுக அறக்கட்டளைக்கு விலக்கு அளித்து சலுகை வழங்கியுள்ளது. அண்ணா அறிவாலயம்முன் உள்ள காலியிடத்தை அப்படியே வைத்திருக்குமாறும், அங்கு கட்டடங்கள் கட்டக் கூடாது, பூங்கா அமைத்துபராமரித்து வர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த உத்தரவுப்படி, அண்ணா அறிவாலயத்திற்கு வட கிழக்கு மூலையில் இந்த காலியிடம்பராமரிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு வேறு சில கட்டடங்களை திமுக அறக்கட்டளைகட்டியுள்ளது. மேலும் 1997ம் ஆண்டு பொதுப் பணிகளுக்கான காலியிடத்தில் சில கட்டடங்களைக் கட்ட திமுகஅறக்கட்டளை அப்போதைய திமுக அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. அதை திமுக அரசும் ஏற்று அனுமதிவழங்கியது.

இது சட்டவிரோதமானது. பொதுப்பணிகளுக்கான காலியிடத்தை திமுக அறக்கட்டளை முறைப்படி பூங்காவாகபராமரித்து வரவில்லை, மாறாக அங்கு அத்துமீறல்கள் நடந்துள்ளன. எனவே இந்த நிலத்தை உடனடியாககைப்பற்றி பொதுமக்கள் நலனுக்குப் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானத்தில்கூறப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடத்தில் கட்சி அலுவலகம் தவிர, கலைஞர் திருமண மண்டபம், சன் டிவிஸ்டுடியோ, மருத்துவமனை உள்ளிட்ட பல கட்டடங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+