பொடா வாபஸை எதிர்த்து பாஜக போராட்டம்
சென்னை:
பொடா சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறுவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 4 நாட்கள் பொதுக்கூட்டம்நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீவிரவாதத்தைக் கண்டித்தும், மத்திய அரசு பொடா சட்டத்தை வாபஸ் பெறுவதைக் கண்டித்தும் அடுத்த மாதம்13-ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 80-வது பிறந்தநாளையொட்டி அவர் கொண்டு வந்த நல்ல திட்டமான நதிகள்இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த பாஜக முடிவு செய்துள்ளது.
அதன்படி அவரது 80-வது பிறந்தநாளான டிசம்பர் மாதம் 25ம் தேதி அன்று பாஜகவினர் 80 நாட்கள்பாதயாத்திரையை திருச்செந்தூரில் இருந்து தொடங்கி சென்னையில் முடிக்க உள்ளனர்.
தமிழக சட்டசபையில் பாஜக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். எதிர்க்க வேண்டும் என்பதற்காகஅரசின் நல்ல திட்டங்களை எதிர்க்க மாட்டோம். கட்டாய மதமாற்ற தடை சட்டத்தைத் தொடர அரசைவலியுறுத்துவோம்.
நடிகர் விஜயகாந்துக்கும், டாக்டர் ராமதாசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையில் விஜயகாந்துக்கு பாஜகமுழு ஆதரவை அளிக்கும் என்று கூறினார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications