காவிரி: உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பை பெற வலியுறுத்தல்
உதகமண்டலம்:
காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை உடனடியாக பெற நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி கூறியுள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் உதகமண்டலத்தில் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில்இரண்டு நாட்கள் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் விவரம் வருமாறு:
காவிரி நதி நீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய பங்கை பெற்றுத் தரதமிழக அரசும், மத்திய அரசும் முயல வேண்டும். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பைஉடனடியாக பெற வேண்டும்.
சென்வாட் கலால் வரியை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய 60,000 பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்பவேண்டும். வேலைநீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி, கூட்டுறவு மற்றும் சாலைப் பணியாளர்களை மீண்டும்பணியில் சேர்த்துக்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும்.
பொதுக்குழு கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி கூறியதாவது:
ஜெயலலிதா தான் பறித்த உரிமைகளையே மீண்டும் வழங்கி வருவதால் அதை வரவேற்பதற்கு ஒன்றுமில்லை.ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவே இத்தகைய நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்துக்குத் தீமை செய்வதில் திமுக-, அதிமுக கட்சிகள் இரண்டுமே சளைத்தவை அல்ல.
அரசியல்வாதிகளுக்கும் திரைத் துறையினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டியதில்லை என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications