தீண்டாமை: பிஷப்கள் மீது தலித் கிறிஸ்தவர்கள் புகார்
சென்னை:
கிருஸ்துவ பேராலய நிர்வாகங்களில் தலித் கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கப்படுதாகக் கூறி தமிழகம் முழுவதிலும் உள்ளபேராயர்களின் வீடுகள் முன்பு போராட்டம் நடத்த தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அமைப்பின் இளைஞர் பிவு செயலாளர் ஆரோக்கியராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அகில இந்திய பேராயர்கள் கவுன்சில் 10 அம்ச திட்டத்தை அனைத்து பேராயர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டிருந்தது.
அதில், முக்கியமானது பேரலாயங்கள், திருமண்டல நிர்வாகங்கள், கிறிஸ்தவ கல்வி நிறுவன நிர்வாகங்களில் தலித்கிறிஸ்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பது. ஆனால் இதை தமிழகத்தில் உள்ள ஒரு பேராயரும்முறையாகக் கடைப்பிடிப்பதில்லை.
பல பேராலயங்கள் தலித் கிறிஸ்தவர்களின் பெயரால் ஏராளமான நிதியை வசூலித்துள்ளன. இவை குறித்த கணக்குகளைபேராயர்கள் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications