நாளை கண்டதேவி தேரோட்டம்: பலத்த பாதுகாப்பு
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கோவில் தேரோட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டுவிடாமல் தடுக்க துணை ராணுவப் படையினரை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரியுள்ளார்.
தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நாளை (ஜூலை 1) நடைபெறவுள்ளது. தலித்மக்கள் தேரோட்டத்தில் கலந்து கொள்வதை எதிர்த்து தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பதட்டம்நிலவுகிறது.
வருடந்தோறும் இந்தப் பிரச்சனை எழுவதும், இதனால் ஜாதி மோதல் ஏற்பட்டு பலிகள் நேர்வதும் வழக்கமாகிவிட்டது. இதனால் பலஆண்டுகளாக தொடர்ந்து தேரோட்டத்தையே அரசு நிறுத்தி வைத்ததும் உண்டு.
இந் நிலையில் நாளை தேரோட்டம் நடக்கவுள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் தேவகோட்டையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் சென்னையில் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், கண்டதேவி தேரோட்டத்தில் தேவேந்திர குலவேளாளர் உள்ளிட்ட தலித் மக்கள் பங்கேற்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக தேவைப்பட்டால், துணை ராணுவத்தினரையும் பாதுகாப்பில் ஈடுபடுத்த அரசு தயாராக இருக்க வேண்டும்.
கண்டதேவி திருவிழாவில் தலித் மக்களும் பங்கேற்பதை மடாதிபதிகள், மதமாற்றத்தை எதிர்ப்போர், அரசியல் கட்சித் தலைவர்கள்ஆகியோர் உறுதி செய்ய வேண்டும்.
தலித் மக்கள் தேரோட்ட விழாவில் கலந்து கொள்வதை ஒட்டுமொத்த கள்ளர் சமுதாயமும் எதிர்க்கவில்லை. ஒரே ஒரு குடும்பம் மட்டும்தான்எதிர்த்து வருகிறது. இது முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தெரியும் என்றார் கிருஷ்ணசாமி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications