லாட்டரி விற்பனையாளர்கள் ஜெவிடம் மனு
சென்னை:
தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதி அளிக்கக் கோரி லாட்டச் சீட்டு முதலாளிகளும், விற்பனையாளர்களும்முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்தில் இன்று கோக்கை மனு கொடுத்தனர்.
தற்போது ஜெயலலிதாவுக்கு நேரம் சரியில்லை என்றும், கோவில் கும்பாபிஷேகங்கள் அவரது ஆட்சிக்கு உலை வைத்து விடும் என்றும்தமிழகத்தில் அனைத்து லாட்டரிச் சீட்டுகளின் விற்பனைக்கும் அதிமுக அரசு தடை விதித்தது. மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்பல்வேறு சலுகைத் திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது.
இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க, ஏகப்பட்ட வரியைக் கொண்டு வரும், லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதிதரலாம் என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது.
இதையடுத்து லாட்டரி அதிபர்கள் போயஸ் வட்டாரத்தின் பலமிக்கவர்களைச் சந்தித்து கவனித்து விட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து லாட்டரி விற்பனைக்கு மீண்டும் அனுமதி வழங்கக் கோரி மாநாடு நடத்துமாறு லாட்டரிச் சீட்டு அதிபர்களிடம்சக்தி வாய்ந்தவர்கள் சொல்லி அனுப்பியதாகவும், அப்படிச் செய்தால் உங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும்கூறியதாகவும தெரிகிறது.
இதையடுத்து லாட்டச் சீட்டு விற்பனையாளர்கள் கோரிக்கை மாநாடு நடத்தி முடித்தனர்.
இந் நிலையில் அகில இந்திய லாட்டரிச் சீட்டு விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் உஸ்மான் பயஸ் தலைமையிலான குழு, இன்று சென்னைதலைமைச் செயலகத்தில் முதல்வரின் அலுவலகத்தில் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
அதில், பல லட்சம் பேருக்கு வாழ்வளிக்கும் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications