குட்டி சாமியார்-பெற்றோர் இடையே ஆதீனம் சமரசம்
சேலம்:
மதுரை ஆதீனம் மேற்கொண்ட சமரச நடவடிக்கையின் பலனாக, சேலம் குட்டிச் சாமியாருடன் ஆசிரமத்தில் தங்கியிருக்க அவரதுபெற்றோர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
| சேலம் நகரை மட்டுமல்லாது தமிழகத்தையே சில வாரங்களாக பெரும் பரபரப்பில் ஆழ்த்தி வருகிறார் குட்டிச் சாமியார் பரணீதர சுவாமிகள்.பெற்றோரே இவரைக் கடத்தியதாக வந்த செய்தி, மான் தோலில் அமர்ந்து அருள் பாலித்தது, நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணம்செய்தது என சரமாரியாக சர்ச்சைகளில் சிக்கியுள்ளா குட்டிச் சாமியார்.
இப்போது வனத்துறை அதிகாரிகளை சாமியார் தரப்பு வளைத்துவிட்டதாகவும், இதனால் மான் தோல் பிரச்சனை முடிவுக்கு வரப்போவதாகவும் சொல்கிறார்கள். |
இப்படி பல பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாத குட்டிச் சாமியாரை சிலர் (ஆசிரம நிர்வாகிகள்) தவறாகப் பயன்படுத்தி பணம்சம்பாதிப்பதாகவும், மகன் தங்களுடன் வந்து தங்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர் பட்டாபிராமன்-சாவித்திரி ஆகியோர் கூறிவந்தனர்.
| வர மறுத்த மகனை ஆள் வைத்தும் கடத்தினர். ஆனால், ஆசிரமத்துக்கே திரும்பிப் போய்விட்ட சாமியார், பெற்றோர் வேண்டுமானால்என்னுடன் வந்து சிஷ்யர்களாகத் தங்கலாம் என்ற சலுகையை அறிவித்தார்.
இதை பெற்றோர் ஏற்க மறுக்க, மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் மதுரை ஆதீனம் சேலம் வந்து குட்டிச் சாமியாரை பார்த்து ஆசி வழங்கினார். பின்னர் அவரது பெற்றோருடனும் பேசிப்பார்த்தார். ஆனால் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர். நேற்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இதில் குட்டிச் சாமியாருடன் தங்க அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். மேலும் தங்களதுமகனின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருக்கவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். |
|
இதையடுத்து விரைவில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, புதிதாக ஒரு ஆசிரமம் கட்டுவது தொடர்பான ஆலோசனைகளை தொடங்க குட்டிச்சாமியார் தரப்பு முடிவு செய்துள்ளது. ஆசிரமத்தைக் கட்டித் தர கோவை, சேலம் பகுதி நகைக் கடை அதிபர்களிடையே போட்டா போட்டிஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications