சென்னை: பிரியா விடை பெறும் மீட்டர்கேஜ் ரயில்
சென்னை:
கடந்த 73 ஆண்டுகளாக லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்ற சென்னை எழும்பூர்-தாம்பரம் இடையிலான மீட்டர் கேஜ் மின்சாரரயிலுக்கு இன்று காலை முதல் பயணிகள் கண்ணீருடன் பிரியா விடை கொடுத்து வருகின்றனர்.
இந்த மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகற்றி விட்டு ரூ. 530 கோடி செலவில், அகல ரயில் பாதையை அமைக்கப்படவுள்ளது. நான்குமாதங்களில் நிறைவடையவுள்ள இந்தப் பணிக்கான செலவில் பாதியை தமிழக அரசு ஏற்கவுள்ளது. இந்தப் பணிகள் நாளைதொடங்குகின்றன.
இதையடுத்து மீட்டர்கேஜ் பாதையில் ஓடி வரும் மின்சார ரயில்கள் இன்று நள்ளிரவுடன் நிறுத்தப்படுகின்றன. இன்று கடைசி நாள் என்பதால்மீட்டர்கேஜ் மின்சார ரயிலில் ஏராளமான பயணிகள் நெகிழ்ச்சியுடன் பயணித்து வருகின்றனர்.
இத்தனை நாட்களாக தங்களை சுமந்து சென்ற மீட்டர்கேஜ் மின்சார ரயிலை பிரியவே மனம் இல்லை என்று பல பயணிகள் உருக்கமாககுறிப்பிட்டனர். சிலருக்கோ கண்களில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கடைசி நாள் பயணம் என்பதால் காலை முதல் பயணிகள் கூட்டம் மீட்டர்கேஜ் மின்சார ரயில்களில் அதிகளவில் உள்ளது. எழும்பூர் முதல்தாம்பரம் வரை பல்வேறு மலரும் நினைவுகளோடு பயணிகள் நெகிழ்ச்சியுடன் பயணித்து வருகின்றனர். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும்ரயிலை நிறுத்தி விழா போல கொண்டாடியும் வருகின்றனர்.
இன்று இரவு கடைசி ரயிலை ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு கொடியசைத்து அனுப்பி வைக்கவுள்ளார்.
இதயத்தில் நெகிழ்ச்சியோடு பயணிகள் கொடுக்கும் பிரியா விடையைப் பார்த்து இரும்பால் ஆன அந்த ரயிலுக்கும் நிச்சயம் "என்ஜின்"கனத்திருக்கும் !












Click it and Unblock the Notifications