அறிவாலயம்: அதிமுக மீது வாசன் பாய்ச்சல்
சென்னை:
திமுகவுக்குச் சொந்தமான அண்ணா அறிவாலய நில விவகாரத்தை அதிமுக அரசு தேவையில்லாமல் அரசியலாக்கி வருகிறது என்று தமிழககாங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசுகூறுகிறது. இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதிக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசின் இந்த செயல் தேவையற்றது, அறிவாலய பிரச்சினையை அரசியலாக்கி வருகிறது. அரசின் செயல் அரசியல் உள்நோக்கம்கொண்டது.
அதிமுக அரசு மக்கள் நலனை மறந்து விட்டு பழிவாங்கும் நோக்கிலேயே தினசரி செயல்பட்டு வருகிறது.
மக்கள் வறுமையிலும், பல்வேறு பிரச்சினைகளிலும் உழன்று கொண்டிருக்கும் போது ரூ. 500 கோடி செலவில் ஆடம்பரமான தலைமைச்செயலகம் தேவையா என்பதை அரசு யோசிக்க வேண்டும் என்றார் அவர்.
மாநகராட்சி சிறப்புக் கூட்டம் ரத்து:
இந் நிலையில், அறிவாலய நில ஆக்கிரமிப்பு தொடர்பாக விவாதிக்க கூட்டப்பட இருந்த மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், விதிமுறைகளை மீறி அண்ணா அறிவாலயத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக விவாதித்து முடிவெடுக்க மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற இருந்தது.
இந் நிலையில் இப்பிரச்சினையில் தமிழக அரசுதலையிட்டு, திமுக அறக்கட்டளைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், நாளையசிறப்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கராத்தே.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications