செல்போன் லைவ் ரிலே மூலம் இளைஞர்களை பிடித்த பெண்கள் + போலீஸ் !
சென்னை:
ஈவ் டீசிங் செய்த இளைஞர்களை 2 பெண்களும், போலீஸாரும் சேர்ந்து 15 நிமிடம் ரோட்டில் துரத்திச் சென்றுபிடித்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள வங்கியில் பணியாற்றுபவர் ஜஹீரா. இவரும் இவரது தோழியும் காலை 9மணியளவில் பஸ் ஏறுவதற்காக பாரிமுனை பகுதியில் காத்திருந்தனர்.
அப்போது 5 பேர் கொண்ட ஒரு கும்பல் இவர்களை பார்த்து ஆபாசமாக பேச ஆரம்பித்தது. இதனால்அதிர்ச்சியடைந்த ஜஹீரா தன்னிடம் இருந்த செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார்.
ஜஹீரா போன் செய்ததைப் பார்த்து விட்ட இளைஞர்கள் அப்போது வந்த ஒரு பஸ்சில் ஏறித் தப்பினர்.
இதையும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்தார் ஜகீரா. அப்போது போலீசார், நீங்களும் பஸ்சில் ஏறிஅவர்களை தொடர்ந்து செல்லுங்கள், போலீஸ் வேன் வழியிலேயே வந்து அந்த பஸ்ஸை மடக்கும் என்றனர்.
இதையடுத்து ஜகீராவும் அவரது தோழியும் பஸ்சில் ஏறினர். பஸ் சென்று கொண்டிருக்கும் பாதையைபோலீஸாருக்கு லைவ் ரிலேவாக செல்போன் மூலம் சொல்லிக் கொண்டே வந்தார் ஜகீரா.
இதையடுத்து போலீசாரும் ரோந்து வேனில் அந்த பஸ்ஸைத் தொடர ஆரம்பித்தனர்.
அந்த பஸ் சிம்ப்சன் நிறுத்தம் அருகே சென்றபோது போலீஸ் ரோந்து வேன் பஸ்சை மறித்து நின்றது. போலீஸ்வேனைப் பார்த்ததும் 5 பேரும் தப்பி ஓட யன்றனர். ஆனால் மணி என்பவனை மட்டும் போலீஸார் பிடித்தனர்.
மற்ற 4 பேரும் ஒடி விட்டனர். மணியை ரோட்டில் வைத்து போலீசார் புரட்டி எடுத்தனர். இதையடுத்துதப்பியோடிவர்களின் பெயர், முகவரிகளை போலீசிடம் சொன்னான் மணி.
இதைத் தொடர்ந்து அந்த நால்வரின் வீடுகளுக்கும் சென்ற போலீஸ் படை அவர்களைக் கைது செய்தது.
ஈவ் டீசிங் செய்த இளைஞர்களைப் பிடிக்க வகை செய்த பெண்ணின் சமயோஜிதத்தையும் தைரியத்தையும்போலீஸார் வெகுவாகப் பாராட்டினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications