மதுரை நீதிமன்றம்: 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்னை வருகை
சென்னை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிரச்சினையைத் தீர்க்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாலகிருஷ்ணன், ஏ.ஆர்.லட்சுமணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையுடன் திருச்சி மற்றும் மத்திய மாவட் டங்களை இணைப்பது குறித்து சென்னைவழக்கறிஞர்களுக்கும், மதுரை வழக்கறிஞர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை மற்றும் மதுரை வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்து விட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிஆர்.சி.லகோதியிடம் விளக்க இரு தரப்பினரும் தனித்தனியே டெல்லி சென்றனர்.
இந் நிலையில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர உச்ச நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிலட்சுமணன் ஆகிய இருவரையும் தலைமை நீதிபதி ஆர்.சி. லகோதி நியமித்துள்ளார். இவர்கள் சென்னைவழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசுகிறார்கள்.
மேலும் வேலை நிறுத்தத்தை உடனே கைவிடும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில் இரு தரப்பினரையும் அழைத்து பேசும்படி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி. லகோதி கூறினார். அதன்படி நாளை இரு தரப்புவழக்கறிஞர்களுடன் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications