யூரோ 2004: கிரீஸ் அணி சாம்பியன்
லிஸ்பன்:
போர்ச்சுகல் அணியைத் தோற்கடித்து ஐரோப்பிய கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை கிரீஸ் அணிவென்றது.
இறுதிப் போட்டியில் போர்ச்சுகல்லும், கிரீசும் மோதின. இந்த இரு அணிகளும் முதன் முறையாகஇறுதிப்போட்டிக்கு இப்போதுதான் தகுதி பெற்றன.
ஏற்கனவே லீக் ஆட்டத்தில் கிரீஸ் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி இருந்தது.இருப்பினும் சொந்த மண்ணில் ஆடும் உற்சாகத்துடன் போர்ச்சுகல் அணி களமிறங்கியது.
போட்டியின் ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் ஆதிக்கம் செலுத்தி வந்தது. முதல் பாதி ஆட்டத்தில் போர்ச்சுகல்அணிக்கு இருமுறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிரீஸ் கோல் கீப்பர் அதை தடுத்து நிறுத்தினார்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் கிரீஸ் அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில்கிரீஸ் வீரர் சாரிஸ்டீஸ் ஒரு கோலை அடித்து அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தந்தார்.
இதனையடுத்து தாக்குதல் ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியது. ஆனால் கிரீஸ்அணியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி கோல் எதுவும் போட விடாமல் பார்த்துக் கொண்டனர்.
அதேநேரத்தில் கிரீஸ் கோல் கீப்பர் பலமுறை போர்ச்சுகல் அணியின் கோல்வாய்ப்பைத் தடுத்து நிறுத்தினார்.இறுதியில் கிரீஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதன்முறையாக யூரோ சாம்பியன்பட்டத்தை வென்றது.
போட்டியைக் காண இரு நாட்டு பிரதமர்களும் மைதானத்திற்கு வந்து இருந்தனர். போர்ச்சுகலின் தோல்வியால்அந் நாட்டு ரசிகர்கள் உற்சாகம் இழந்தும், சில தீவிர ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதபடியும் காணப்பட்டனர்.
அதே நேரத்தில் போர்ச்சுகல் அணியை அதன் சொந்த மண்ணிலேயே இருமுறை தோற்கடித்ததோடு, சாம்பியன்பட்டத்தையும் வென்ற குதூகலத்தில் கிரீஸ் ரசிகர்கள் தங்களது வெற்றியைக் கொண்டாடினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications