எம்பிபிஎஸ்: ஏழை மாணவர்களுக்கு ஜெ உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் பொருளாதாரரீதியில் வசதியில்லாததால்அதில் சேர முடியாமல் தவித்த ஒரு மாணவன், ஒரு மாணவிக்கு அதிமுகவின் எம்.ஜி.ஆர்.அறக்கட்டளையின் சார்பில் ரூ. 2.16 லட்சத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் சித்ரா, மாநகராட்சி பள்ளியில்படித்து பிளஸ் டூவில் 1,152 மதிப்பெண்கள் எடுத்தார். இவருக்கு செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

அதே போல சேலம் பெரியபட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் செல்வநாதன்1,162 மதிப்பெண்கள் எடுத்து, நுழைவுத் தேர்வும் சிறப்பாக எழுதியதால், சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது.

தங்களது நிலையை விளக்கி முதல்வருக்கு இவர்கள் கடிதம் அனுப்பினர். இதையடுத்து கல்லூரிக்கட்டணம், விடுதிச் செலவு, புத்தகச் செலவுக்காக சித்ராவுக்கு ரூ. 1 லட்சத்தையும், செல்வநாதனுக்குரூ. 1.16 லட்சத்தையும் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் சார்பில் ஜெயலலிதா வழங்கியுள்ளனர்.

அதே போல கடந்த இரு ஆண்டுகளாக எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிடம் நிதியுதவி பெற்றுமருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் 11 மாணவ, மாணவிகளுக்கு இந்தஆண்டுக்கான கட்டணமாக ரூ. 4.16 லட்சத்தையும் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.

மொத்ததில் 13 மாணவ, மாணவிகளுக்கும் ரூ. 6.32 லட்சம் வழங்கியுள்ளார்.

சிறுபான்மை இளைஞர்களுக்கு உதவி:

இதற்கிடையே 1,000 சிறுபான்மையின இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ. 25,000கடனுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் தோல்வியையடுத்து தமிழக அரசு பலவித சலுகைகளை அறிவித்து வருகிறது.இஸ்லாமிய, கிருஸ்தவ சமூகத்தினரை மனதில் வைத்து இந்த புதிய சலுகையை முதல்வர்அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ளஅறிக்கை விவரம்:

இப்போது முஸ்லீம்கள், கிருஸ்துவர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள், சீக்கியர்கள் ஆகியோருக்குகாய்கறிக் கடை, இட்லிக் கடை, தையல் கடை, பூக் கடை, பழக்கடை, பாய் முடைகள் போன்றதொழில்களைத் தொடங்க ரூ. 10,000 வழங்கப்பட்டு வருகிறது.

எந்தவிதமான ஜாமீனும் இல்லாமல் 5 சதவீத வட்டிக்கு இந்தக் கடனுதவி வழங்கப்படுகிறது.

இத் திட்டத்தை விரிவாக்கி ரூ. 25,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ்

1,000 இளைஞர்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.

2 நபர் ஜாமீனுடன் மாவட்ட ஆட்சியரை அணுகி இந்தக் கடனுதவியைப் பெறலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+