குப்பையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள் !
மதுரை:
மதுரை நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையில் போடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
மதுரை யானைக்கால் கல்பாலம் அருகே வைகை ஆற்றங்கரையை ஒட்டிய குப்பை மேட்டுப் பகுதியில்புகைப்படத்துடன் கூடிய அட்டைகள் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி சிறுவர்கள் அதை எடுத்துப் பார்த்துள்ளனர்.
அப்போதுதான் அது வாக்காளர் அடையாள அட்டை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அந்தக் குப்பைமேட்டை கிளறிப் பார்த்தபோது ஏராளமான அடையாள அட்டைகள் அங்கு குவியல் குவியலாக புதைத்துவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்த செய்தி போலீஸாருக்கு செல்லவே போலீஸார் விரைந்து வந்து குப்பை மேட்டை தோண்டிப் பார்த்தனர்.அங்கு நூற்றுக்கணக்கான வாக்காளர் அட்டைகள், முறையான அதிகாரிகள் கையெழுத்துடன் இருந்தது தெரியவந்தது. இவை அனைத்தும் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சட்டசபை தொகுதியைச் சேர்ந்தவாக்காளர்களுடையது.
ஏற்கனவே பல லட்சம் வாக்காளர்கள் மாநிலம் முழுவதும் ஓட்டுப் போட முடியாத நிலை சமீபத்திய மக்களவைத்தேர்தலின்போது ஏற்பட்டது. இந் நிலையில் கடலாடி தொகுதி வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டைமதுரை குப்பையில் புதைத்து வைக்கப்பட்டிருப்பது பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சாரங்கி, இந்த விவகாரம் தொடர்பாக விரிவானஅறிக்கை தருமாறு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பத்ரிநாத் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
ஓரிரு நாட்களில் அறிக்கை கிடைக்கும். அதன் பின்பு தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications