தமிழக அமைச்சர்களின் சாப்பாட்டுப் பிரச்சினை
டெல்லி:
நம்ம ஊர் சாப்பாடு சரிவர கிடைக்காததால் தமிழகத்தைச் சேர்ந்த பல மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து தமிழ்நாடுஇல்லத்திலேயே தங்கியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில் சிலருக்கு மட்டுமே அரசு வீடுகள்ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற அமைச்சர்களுக்கு இன்னும் வீடுகள் கிடைக்கவில்லை.
இதனால் மத்திய அமைச்சர் இளங்கோவன் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் தொடர்ந்து தமிழக அரசுக்குச் சொந்தமானதமிழ்நாடு இல்லத்திலேயே தங்கியுள்ளனர்.
மேற்கண்ட அமைச்சர்களின் துறைகளுக்குரிய விருந்தினர் இல்லங்கள் இருக்கும்போது தமிழ்நாடு இல்லத்திலேயேதொடர்ந்து தங்கியிருப்பது ஏன்? என்று இவர்களிடம் கேட்டால் சுவாரஸ்யமான பதில் வருகிறது.
இளங்கோவன் கூறுகிறார்: எனது துறையைச் சேர்ந்த பல விருந்தினர் இல்லங்கள் பல காலமாக பூட்டியேகிடக்கின்றன, பராமரிப்பும் சரியில்லை. அதை சரி செய்ய வேண்டும் என்றால் நிறைய செலவு ஆகும்.
மேலும், நல்ல சாப்பாடும் அங்கு கிடைக்காது. நம் ஊர் சாப்பாட்டுக்கு தமிழ்நாடு இல்லத்தில் பஞ்சம் இல்லைஎன்பதால் எனக்கு புதிய வீடு ஒதுக்கப்படும் வரை இங்கேயே தங்க முடிவு செய்து விட்டேன் என்கிறார்.
இதே பதிலைத்தான் மற்ற அமைச்சர்களும் கூறுகிறார்கள். தமிழ்நாட்டு சாப்பாடு கிடைக்கவில்லை என்பதால்,தமிழ்நாடு இல்லத்திலேயே இப்போதைக்குத் தங்க இந்த அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனராம்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications