ஜெ. நாளை குருவாயூர் பயணம்
பாலக்காடு:
முதல்வர் ஜெயலலிதா நாளை குருவாயூர் கோவிலுக்குச் செல்கிறார்.
கேரள ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கரின் ஆலோசனையின்படி வழக்குகளில் இருந்து தப்பஇந்தக் கோவிலுக்கு யானையை தானம் தந்தார் ஜெயலலிதா. பின்னர் தேர்தலில் வென்றவுடன் தங்கக்குடத்தை காணிக்கையாகத் தந்தார்.
பணிக்கரின் யோசனைப்படியே பெரும்பாலான முடிவுகளை இப்போதெல்லாம் ஜெயலலிதா எடுத்துவருகிறார்.
இந் நிலையில் அவரது ஆலோசனையின்படி குருவாயூர் கோவிலில் பால் பாயசம் செய்து சுவாமிக்குநைவேத்யம் செய்ய ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
இதற்காக நாளை (7ம் தேதி) ஜெயலலிதா குருவாயூர் செல்கிறார். தனி விமானம் மூலம் கோவைக்குச்சென்று சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் குருவாயூர் செல்வார் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் கொச்சிக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் குருவாயூர் வருவார்என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பயணம் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், முதல்வரின் பயணத் திட்டம் குறித்து அரசுஎந்தத் தகவலையும் தெரிவிக்க மறுக்கிறது.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி குருவாயூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர்இறங்குவதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுடன் தோழி சசிகலாவும் செல்லக் கூடும் என்று தெரிகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications