லாலுவிடம் நிதி கேட்கும் ப.சிதம்பரம்
சென்னை:
எம்.பிக்கள், மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது தொகுதிகளின் திட்டங்களுக்காகவும் தங்களதுதுறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கக் கோரி ப.சிதம்பரத்தை கெஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில்,திருச்சி-காரைக்குடி-மானாமதுரை அகல ரயில் பாதைத் திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கி உதவுமாறு ரயில்வேஅமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை தொகுதியில் அடங்கிய காரைக்குடி-மானாமதுரை அகல ரயில் பாதைத் திட்டம் ரயில்வே துறையால்மிக, மிக அலட்சியமாக, மிக மெதுவாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இதனால், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சியினரின் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்ப.சிதம்பரம்.
5 முறை சிவகங்கை தொகுதியின் எம்.பியாக இருந்தபோதிலும், இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் தவறி விட்டதாகப.சிதம்பரம் மீது புகார் கூறப்படுகிறது.
இந் நிலையில் மீண்டும் எம்.பியாகி நிதியமைச்சராகவும் ஆகிவிட்டார் சிதம்பரம்.
இந் நிலையில் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை இந்தியா என்ற ஜன்னலின் வழியாகசிவகங்கையை பார்த்து வந்தேன். இனிமேல் சிவகங்கை வழியாக இந்தியாவைப் பார்க்கப் போகிறேன்.
திருச்சி-காரைக்குடி-மானாமதுரை அகல ரயில் பாதைத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்குமாறு லாலு பிரசாத்திடம்கோரிக்கை வைத்துள்ளேன். இதுதொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் பலமுறை அவரிடம் பேசியுள்ளேன்.
2001ம் ஆண்டிலேயே இந்த திட்டம் நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மொத்தமே ரூ. 1 கோடிதான். எனவேதான் திட்டம் நிறைவு பெறாமல் உள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வாரியத் தலைவருக்கும், ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதங்கள்அனுப்பியுள்ளேன். ரயில்வே பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படும் என நம்புகிறேன் என்றுகூறியுள்ளார் சிதம்பரம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications