இன்பத்தமிழனை இழுத்துவிட்ட தாமரைக்கனி !
ஸ்ரீவில்லிபுத்தூர்:
தனது பெயரை தேவையில்லாமல் பயன்படுத்திய தாமரைக்கனி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரதுமகனும், இளைஞர் நலத்துறை அமைச்சருமான இன்பத்தமிழன் கூறியுள்ளார்.
இந் நிலையில் தாமரைக்கனியின் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார்வழக்குப் போட்டுள்ளனர். இதனால் அவர் எந்நேரமும் கைதாகலாம் என்று தெரிகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் நிலவும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தை போக்கக் கோரி பல்வேறு கட்சிகளைச்சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் தாமரைக்கனியும் பங்கேற்கிறார். இதில் அமைச்சர் இன்பத்தமிழனும் கலந்து கொள்வார்என நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள இன்பத்தமிழன் அவசரமாய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எனதுபெயைர தேவையில்லாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் இழுத்து விட்டுள்ளார் தாமரைக்கனி.உள்நோக்கத்துடன் (பதவி பறிபோகட்டும் என்பதற்காக) அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.
இந்தச் செயலுக்காக தாமரைக்கனி பொது மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்கு பாதிப்பு ஏற்பட வேண்டும்என்பதற்காகவே எனது பெயரை சுவரொட்டிகளில் போட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு இன்பத்தமிழன் கூறியுள்ளார்.
இதற்கிடையே உண்ணாவிரதத்தில் அதிமுகவும் பங்கேற்கும் என நோட்டீஸ் அச்சடித்து ஒட்டியதாகதாமரைக்கனியின் மீது போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதனால் அவர் எந்நேரமும் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications