தமிழகத்தில் இனி 1ம் வகுப்பு முதல் ஆங்கிலம்
சென்னை:
தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஏழை மாணவர்களும் போட்டி போடும் வகையிலஅரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தக் கல்வியாண்டு முதல் 45,000 அரசுப் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதலே ஆங்கிலம்கற்பிக்கப்பட்டவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 3ம் வகுப்பில் இருந்து தான் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. தனியார்பள்ளிகளில் கிண்டர் கார்டன் எனப்படும் ஆரம்பக் கல்வியிலேயே ஆங்கிலம் சொல்லித்தரப்படுகிறது.
இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலக் கல்வியில் பின் தங்கிவிடுகின்றனர். ஆங்கிலத்தில்உரையாடுவது, ஆங்கிலத்தில் எழுதுவது ஆகியவற்றில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டிபோட முடியாமல் பின் தள்ளப்படுகின்றனர்.
மாறி வரும் சமூக, பொருளாதார சூழலில், வேலைக்காக இளம் தலைமுறையினர் கடும் போட்டியைசந்தித்து வரும் நிலையில் ஆங்கிலப் புலமையில்லாத மாணவர்கள் திணறி வருகின்றன.
இதையடுத்து அரசுப் பள்ளிகளின் கல்வி முறையை மாற்ற அரசு முயற்சி எடுத்துள்ளது. அதன் முதல்படியாக 1ம் வகுப்பிலேயே ஆங்கிலத்தையும் சொல்லித் தர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனை இந்தக் கல்வியாண்டு முதலே அமலாக்கவும், அதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி தரவும்திட்டமிடப்பட்டுள்ளது. சில பள்ளிகள் இதனை ஏற்கனவே அமலாக்க ஆரம்பித்துவிட்டன.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications