மைக்ரோ பயலாஜி விடைத்தாளை திருத்திய ஆங்கில பேராசிரியர்கள்!!
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், நுண்ணுயிரியல் (மைக்ரோ பயாலஜி) விடைத் தாள்களை இரண்டுஆங்கிலப் பேராசிரியர்கள் திருத்திய வினோதம் நடந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பி.எஸ்.சி நுண்ணுயிரியியல் செமஸ்டர் தேர்வின்விடைத்தாள் திருத்தும் பணியில் சில ஆங்கில பேராசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக பரபரப்புப் புகார் எழுந்தது.
ஆனால், அப்படியேதும் நடக்கவில்லை என பல்கலைக்கழகம் மூடி மறைக்க முயன்றது. ஆனாலும் தொடர்விசாரணையில் தவறு நடந்திருப்பது உறுதியானது.
விடைத்தாள் திருத்தப்பட்ட 17 மாணவர்களும் முதலில் பாஸ் ஆனதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தவறுவெளியில் தெரிய வந்தவுடன் ஒரு மாணவரை மட்டும் ஒப்புக்கு பெயில் ஆக்கியது பல்கலைக்கழகம்.
இந் நிலையில் விவகாரம் பெரிதானதையடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டார் தையடுத்து பல்கலைக்கழகதுணைவேந்தர் பி.கே.பொன்னுச்சாமி.
இதில், இரு ஆங்கிலப் பேராசிரியர்கள் மைக்ரோ பயாலஜி விடைத் தாள்களைத் திருத்திய விவரம் உறுதியானது.
இதையடுத்து தவறு செய்த அந்த இரு ஆங்கில பேராசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகதேர்வுக் குழுவுக்கு பொன்னுசாமி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த இரு ஆசிரியர்களும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த விடைத்தாள்களையும் திருத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கவும், துணைவேந்தர் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தடை விதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் தனியார் கல்லூரியில் கடந்த 17 வருடங்களாக ஆங்கிலப் பேராசிரியராகப்பணியாற்றி வருபவர். மற்றொருவர் அரசுக் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவரது கல்வி அனுபவம் 37ஆண்டுகளாகும்.
இந்த ஆசிரியர்கள் தண்டிக்கப்பட்ட ஒரு பக்கம் இருக்க, இவர்களை விடைத்தாள் திருத்தச் சொன்னது யார்?,ஆங்கிலப் பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதை மைக்ரோ பயாலஜி துறை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டதுபோன்ற முக்கியமான கேள்விகளுக்கு மதுரை பல்கலைகழத்திடம் இருந்து உரிய பதில் இல்லை.
இதில் மேல் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிடுவதே பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்துக்குநல்லது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications