ஜனனியின் ரூ. 1.4 கோடி விவாரத்தில் புது திருப்பம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நடனமாடும் ராஜரின் தோழி ஜனனியிடம் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ரூ. 1.4 கோடிவிவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Jananiஇந்தப் பணம் கடம்பூர் ஜமீன்தார் ஜெகதீஷ் ராஜாவுக்குச் சொந்தமானது என ஜனனி தரப்பு கூறியதுபொய் என வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர்.

நடனமாடும் ராஜருடன் நெருக்கமாக இருந்ததால் ஜனனியை உள்ளே போட முடிவு செய்தபோயஸ் தோட்டத்து மகா சக்தி, அவரை கஞ்சா வழக்கில் உள்ளே தள்ளினார்.

இதில் ஒரு வழியாய் ஜாமீனில் வெளியே வந்தார் ஜனனி. ஜனனியின் மதுரை வீட்டில் ரெய்ட்நடத்தி, கஞ்சாவைப் கைப்பற்றியதோடு ஜனனியிடம் இருந்து ரூ. 1.4 கோடியும் கைப்பற்றியதாகபோலீசார் கூறினர்.

இந்தப் பணம் தமிழக அரசின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

ஆனால், இந்தப் பணத்தை சென்னையில் ஜனனிக்கு நடனமாடும் ராஜர் வாங்கித் தந்த பங்களாவில்இருந்து போலீசார் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாயின. அத்தோடு ஏராளமான நகைககளும்பிடிபட்டதாகவும், அவையெல்லாம் மகா சக்தியிடம் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந் நிலையில் இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை நுழைந்தது. ஜனனியிடம் கைப்பற்றப்பட்ட பணத்துக்குகணக்கு, வழக்கு இல்லாததாலும், உரிய வரி செலுத்தப்படாததாலும் அதை தங்களிடம் ஒபபடைக்க வேண்டும் எனவருமான வரித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதை எதிர்த்து ஜனனி தரப்பில் ஒரு பதில் மனு தாக்கலானது. அதில், இந்தப் பணத்தை கடம்பூர் ஜமீன்தார் ஜெகதீஷ்ராஜா என்பவர் தன்னிடம் தந்து வைத்ததாகக் கூறியிருந்தார். இதனால் பணத்தை அவரிடமே கொடுக்க வேண்டும்என்று ஜனனி கோரினார்.

இதைத் தொடர்ந்து ஜமீன்தாரின் கணக்கு வழக்குகளை வருமான வரித்துறையினர் துருவினர்.

இந்தப் பணம் எப்படி வந்தது என ஜமீன்தாரிடம் வருமான வரித்துறை குடைந்தபோது, டெல்லியைச் சேர்ந்தஆடிட்டர் ரவி சோப்ராவும், இந்தூரைச் சேர்ந்த அதுல் திவாரி என்பவரும் இதை தன்னிடம் கொடுத்த வைத்ததாகதலைசுற்ற வைக்கும் வாக்குமூலம் தந்தார் ஜமீன்தார்.

ஆனால், இந்தப் பணத்துக்கு ஜமீன்தார் வருமான வரியும் செலுத்தவில்லை. தனது வருமான வரிக் கணக்கிலும்காட்டவில்லை.

இதைத் தொடர்ந்து ரவிசோப்ரா மற்றும் அதுல் திவாரியின் கணக்குகளையும் வருமான வரித்துறை தோண்டித்துருவி விசாரணை நடத்தியது. அதில் ஜமீன்தார் ஜெகதீஷ் ராஜாவிடம் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் ஏதும்அவர்களிடம் இல்ஸை.

மேலும் அவர்கள் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கிலும் இந்தப் பணத்தை கணக்கில் காட்டவில்லை.

இது தவிர, அதுல் திவாரியின் போன் நம்பர் என்று ஒரு எண்ணை உயர் நீதிமன்றத்திடம் ஜமீன்தார்தெரிவித்திருந்தார். அந்த நம்பரும் போலியானது என வருமான வரித்துறையின் விசாரணையில்தெரியவந்துள்ளது.

இந்த விவரங்களையெல்லாம் மதுரையில் ஜனனியின் வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளவருமான வரித்துறை, ரூ. 1.4 கோடி ஜமீன்தாருக்கு சொந்தமானது அல்ல, இதனால் அவரிடம் ஒப்படைக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது.

இந்தப் பணம் நடனமாடும் ராஜர் ஜனனிக்குத் தந்தது என்று எதிர்க் கட்சிகள் சந்தேகம் கிளப்பியதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+