என்னை பழி வாங்குகிறார் ஜெ: கி. வீரமணி தாக்கு
சென்னை:
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை திராவிடர் கழகம் எதிர்த்ததால், அதற்குப் பழிவாங்கும்விதமாக பெரியார், மணியம்மை அறக்கட்டளை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசுநோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
போயஸ் தோட்டத்து பூசாரி என்று திமுக தலைவர் கருணாநிதியால் வர்ணிக்கப்படும் அளவுக்குமுதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்தவர் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.
இந் நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தார்.கருணாநிதியை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அந்தக் கட்சிக்காக தேர்தல்பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
இதையடுத்து அவரது தலைமையில் இயங்கும் அறக்கட்டளைகளுக்கு அரசு ஒதுக்கிய நிலத்தை ஏன்திரும்பப் பெறக் கூடாது என்று கேட்டு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வல்லம் பாலிடெக்னிக் கல்லூரிக்காக அரசிடம் பணம் கொடுத்துத் தான் நிலத்தை வாங்கினோம்.ஆனால், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
இந் நிலையில் நிலத்தைக் கைப்பற்ற தமிழக அரசு முயல்கிறது. இது மிக மோசமான பழி வாங்கும்நடவடிக்கை.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவை எதிர்த்ததால் இந்த பழி வாங்கும் செயலில் தமிழக அரசுஇறங்கியுள்ளது.
பெரியாரும் மணியம்மையும் தங்களது சொந்த சொத்துக்களையும் பொது மக்கள் கொடுத்தநன்கொடைகளையும் வைத்துத் தான் அறக்கட்டளையைத் தொடங்கி கல்லூரிகளை அமைத்தனர்.
பல்வேறு தடைகளைத் தாண்டி இவை இயங்கி வருகின்றன. தொடர்ந்து அவை இயங்கிக் காட்டும்என்று கூறியுள்ளார் வீரமணி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications