ஆளுநர்கள் நீக்கம்: வழக்கை ஏற்றது உச்ச நீதிமன்றம்
டெல்லி:
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்சைச் சேர்ந்த 4 மாநில ஆளுநர்களை மத்திய அரசு பதவி நீக்கியதை எதிர்த்துதாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், உத்தரப் பிரதேச ஆளுநர் விஷ்ணுகாந்த் சாஸ்திரி, குஜராத்ஆளுநர் கைலாஷ்பதி ராவ் மிஸ்ரா, ஹரியாணா ஆளுநர் பாபு பரமானந்த், கோவா ஆளுநர் கிதார்நாத் சர்மா ஆகியோரை பதவி நீக்கம் செய்தது.
இதை எதிர்த்து பா.ஜ.க. முன்னாள் எம்.பி சிங்கல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி லகோத்தி தலைமையிலான மூன்று நீதிபதிகள் பெஞ்ச்விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந் நிலையில் மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மாநில ஆளுநர்களைநீக்க மத்திய அரசுக்கு அரசியல் சட்டரீதியில் முழு உரிமை உண்டு என்றார்.
மத்திய அமைச்சரை கைது செய்ய உத்தரவு:
இதற்கிடையே மத்திய நிலக்கரித்துறை அமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபுசோரேனை, 1970ல் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்ய ஜார்க்கண்ட் மாநில செசன்ஸ்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள்ராஜ்யசபாவில் பிரச்சனை கிளப்பின. இதனால் கூச்சல்-குழப்பம் ஏற்படவே ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
குற்றப் பின்னணி உடைய அமைச்சர்களை நீக்க வேண்டும் என பா.ஜ.க. கோரி வருவதுகுறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications