சிறையில் கருணாவின் கூட்டாளி சுட்டுக் கொலை
கொழும்பு:
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவின் தீவிர ஆதரவாளரான சச்சி மாஸ்டர் என்றகணபதிபிள்ளை மகேந்திரன், மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராணுவத்துக்கும், கருணாவுக்கும் ஆதரவாகவும் புலிகளுக்கு எதிராகவும் இவர் மாறன் என்ற பெயரில் அறிக்கைகள்விட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு இலங்கை ராணுவம் உதவிகள் செய்து வருவதாக புலிகள் ஏற்கனவே குற்றம் சாட்டி வந்தனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை சிறைக்குள் ஊடுருவிய நபர் சச்சி மாஸ்டரையும், கருணாவின் இன்னொருஆதரவாளரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தப்ப முயன்றார்.
அதற்குள் ராணுவத்தினரும், போலீசாரும் சிறைச் சாலையை சுற்றி வளைத்துவிட்டனர். இதையடுத்து செஞ்சிலுவைச்சங்கத்தின் முன்னிலையில் அவர் போலீசாரிடம் சரணடைந்தார்.
அவரிடம் இருந்து கிரனைட் குண்டும், துப்பாக்கியும பறிமுதல் செய்யப்பட்டது.
பண மோசடி செய்ததையடுத்து, கடந்த 2002ம் ஆண்டிலேயே சச்சி மாஸ்டரை தங்களது இயக்கத்தில் இருந்துபுலிகள் நீக்கிவிட்டனர். ஆனால், அவரை கருணா மீண்டும் படையில் சேர்த்துக் கொண்டு அம்பாறை மாவட்டகமாண்டராக்கினார்.
கருணா புலிகள் தங்களது அமைப்பிலிருந்து நீக்கியதையடுத்து சச்சி மாஸ்டரும் தப்பியோடிவிட்டார். ஆனால்,கடந்த மார்ச் மாதம் ஆயுதங்களுடன் வேனில் சென்ற அவரை போலீசார் கைது செய்து மட்டக்களப்பு சிறையில்அடைத்தனர்.
ஆனாலும், இலங்கை ராணுவம் இவருக்கு சிறையில் பல உதவிகள் செய்து வந்ததாகக் கூறப்பட்டது. சிறையில்இருந்தபடியே மாறன் என்ற பெயரில் ராணுவத்தின் உதவியுடன் இவர் தங்களுக்கு எதிராக அறிக்கைகளை விட்டுவருவதாக புலிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந் நிலையில் மிக பலத்த பாதுகாப்பு கொண்ட மட்டக்களப்பு சிறையில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மீண்டும் போர் வெடிக்கும்: ஆய்வு மையம்
இதற்கிடையே, இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கலாம் என குணாணூச்ணாஞூணிணூ (ண்ணாணூச்ணாஞுஞ்டிஞி ஞூணிணூஞுஞிச்ண்ணாடிணஞ்) என்ற சர்வதேசபுலனாய்வு மையம் எச்சரித்துள்ளது.
கருணாவைப் பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்து போன்ற செயல்களில் இலங்கை ராணுவம் ஈடுபட்டுள்ளதாகக்,போரை நோக்கியே இலங்கை அரசின் செயல்பாடுகள் இருப்பதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.
புலிகளை முறியடிப்பதற்கான தந்திர உபாயங்களை இலங்கை ராணுவத்தினருக்கு அமெரிக்க நிபுணர்கள் அளித்துவருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications