கட்டியணைத்து இறந்து கிடந்த இளம் பிஞ்சுகள்
கும்பகோணம்:
பள்ளியில் இறந்து கிடந்த குழந்தைகளில் பலரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி இறந்து கிடந்தனர்.
தீ நாலாபுரமும் சுற்றிப் பரவியதால், என்ன செய்வது என்று தெரியாத அந்த பிஞ்சுகள், கதறியபடி ஒருவரை ஒருவர்பிடித்துக் கொண்டு பலியாகியுள்ளன.
ஒரு குழந்தை மட்டுமே நடக்கும் அளவுக்கு மிகக் குறுகலான படிக்கட்டுகள் தான் பெரும்பாலான உயிரைக்குடித்துள்ளது. அந்தப் படிக்கட்டுகள் முழுவதும் குழந்தைகளின் பைகளும், புத்தகங்களும், அவர்களுக்கு மிகப்பிடித்தமான பல வண்ண பென்சில் பாக்ஸ்கம் எரிந்தும், கருகியும் சிதறிக் கிடந்தன.
குழந்தைகளின் பிணக் குவியலுக்கு மத்தியில் அங்கங்கே அவர்களது டிபன் பாக்ஸ்கள் கருகிப் போய், இந்தச்சாவுகளை நேரில் கண்டதன் மெளன சாட்சிகளாக சிதறிக் கிடந்தன.
பெரும்பாலான பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளின் உடலை பார்க்கக் கூட தெம்பில்லை. பயந்து பயந்து வந்துஉடலைப் பார்த்து, அது தங்கள் குழந்தை என்று உறுதியானவுடன் அவர்கள் முகத்தில் வெளியான மிரட்சியும்,ஆதங்கமும், வெடித்து வெளிவந்த கதறல் ஒலியும் அதை நேரில் பார்த்தவர்களை நிலை குலைய வைத்துவிட்டன.
எரிந்த உடல்களை போலீசார் ஒவ்வொன்றாக எடுத்து ஸ்ட்ரெச்சர்களில் வைத்தபோது, பல போலீசாரின் கண்களில்கண்ணீர். உடலின் எந்தப் பகுதியைப் பிடித்துத் தூக்குவது என்று தெரியாத அளவுக்கு எல்லா பகுதியும் எரிந்துபோய் இருந்தன பல உடல்கள்.
எரிந்த கூடுகளுக்கு மத்தியில் ஏதாவது ஒரு உயிர் முனகிக் கொண்டு கிடக்கிறதா, அதைக் காப்பாற்றிவிடலாம் என்றஆர்வத்தில் தீயணைப்புப் படையினரும் போலீசாரும் பெற்றோரும் அலை பாயந்து கொண்டிருந்தனர்.
உடல்கள் ஒப்படைக்கப்பட்ட பெற்றோர்கள், அவர்களை வீடுகளுக்கு கைகளில் ஏந்திக் கொண்டு, அரற்றியவாரேசெல்வதைப் பார்க்க முடியாமல் பல நிருபர்கள் கண்ணீர் விட்டனர். பல பெற்றோர்கள் குழந்தையின் உடலைப்பார்த்தவுடன் மயங்கினர். உடல் ஒப்படைக்கப்பட்டபோது அதைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல்சாலைகளிலேயே சரிந்தனர்.
பேரக் குழந்தைகளின் நிலைமை என்னவென்று புரியாமல் முதிய பாட்டிகள், தாத்தாக்கள் கூட்ட நெரிசலுக்குமத்தியில் போவோர் வருவோரிடம் எல்லாம் விவரம் கேட்டு அழுததை காண சகிக்க முடியவில்லை.
உடல் முழுவதும் வெந்து போன பல குழந்தைகள் மருத்துவமனைகளில் அம்மா, அப்பா என்று முனகிக்கொண்டிருக்க, அவர்களை மடியில் போட்டுக் கொண்டு கதறிக் கொண்டிருக்கின்றனர் பல பெற்றோர்கள்.
உடல்கள் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளின் வெளியே குழந்தைகளின் உறவினர்கள் ஒருவரை ஒருவர்கட்டியணைத்து அழுதது வாழ்வில் மறக்க முடியாத சோகம்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications